புத்தம் புதிய ஐபோன் வாங்கணும் ரூ.14,999 முன் பதிவு கொடுத்து இப்படியும் பவங்களாம்
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XR மாடல்களை கடந்த மாதம் அறிமுகம் செய்த நிலையில், இவற்றின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XR மாடல்களை கடந்த மாதம் அறிமுகம் செய்த நிலையில், இவற்றின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியுள்ளது.
புதிய ஐபோன் மாடல்கள் அக்டோபர் 26-ம் தேதி முதல் இந்தியா உள்பட 50 நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் புதிய ஐபோன் XR 64 ஜி.பி. மாடல் ரூ.76,900, 128 ஜி.பி. விலை ரூ.81,900 மற்றும் 256 ஜி.பி. விலை ரூ.91,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் XR மாடல் அமேசான் வெப்சைட்டில் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த வெப்சைட்டில் முன்பதிவு செய்வோர் செலக்ட் செய்யப்பட்ட பேங்க் கார்டுகளை பயன்படுத்தும் போது 5 சதவிகிதம் உடனடி தள்ளுபடி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இதேபோன்று ஏர்டெல் ஆன்லைன் வெப்சைட்டில் புதிய ஐபோன் முன்பதிவு நடைபெறுகிறது. அந்த வகையில் பயனர்கள் ரூ.14,999 முன்பணம் செலுத்தி மீதித்தொகையை ரூ.3,499 என்ற வகையில் 24 மாதத்திற்கு செலுத்தலாம். இத்துடன் ஒவ்வொரு மாதமும் 10 ஜி.பி. டேட்டா, மற்றும் மூன்று மாதங்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும் ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. ஏர்டெல் ஆன்லைன் தளத்தில் எளிய மாத தவணை முறை வசதி, பில்ட்-இன் போஸ்ட்பெயிட் சலுகையில் அன்லிமி்ட்டெட் காலிங் மற்றும் பிரீமியம் டேட்டாக்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் பேடிஎம் மால் வெப்சைட்டில் முன்பதிவு செய்து ரூ.7,000 எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் வெப்சைட்டில் ஐபோன் XR விற்பனை விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் XR சிறப்பம்சங்கள்:
– 6.1 இன்ச் 1792×828 பிக்சல் எல்.சி.டி. 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
– 6-கோர் ஏ12 பயோனிக் 64 பிட் 7 என்.எம். பிராசஸர்
– 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர், நியூரல் என்ஜின்
– 3 ஜி.பி. ரேம்
– 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
– ஐ.ஓ.எஸ். 12
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
– டூயல் சிம் (நானோ+இரண்டாவது இசிம் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
– 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ட்ரூ டோன் ஃபிளாஷ்
– 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
– ட்ரூ டெப்த் கேமரா
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்
– 2942Mah பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
– ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆப்பிள் ஐபோன் XR மாடல் வைட், பிளாக், புளு, எல்லோ, கோரல் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile