ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே என மூன்று வித நிறங்களில் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் மூன்று ஐபோன் மாடல்கள்: இரண்டாம் தலைமுறை ஐபோன் X, விலை குறைந்த ஐபோன் X தோற்றத்தில் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட 6.1 இன்ச் ஐபோன் மற்றும் ஐபோன் X பிளஸ் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங்-சி கியோ வெளியிட்டிருக்கும் புதிய தகவல்களில் இரண்டாம் தலைமுறை ஐபோன் X பிளாக், வைட் மற்றும் கோல்டு நிறங்களிலும், 6.1 இன்ச் ஐபோன் ரெட், புளு, ஆரஞ்சு, கிரே மற்றும் வைட் உள்ளிட்ட நிறங்களில் வெளியிடப்படலாம் என தெரிவித்து இருக்கிறார்.
இதன் ரெட் நிறம் 2018 ஐபோன் X பிராடக்ட் ரெட் (PRODUCT RED) வெர்ஷனா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இதே போன்று ஐபோன் 8 மாடலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஐபோன் X ரெட் வெர்ஷன் மட்டும் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் கோல்டு நிற ஐபோன் X ப்ரோடோடைப் இணையத்தில் கசிந்திருந்தது.
குறைந்த விலை, பெரிய டிஸ்ப்ளே, டூயல்-சிம் டூயல்-ஸ்டான்ட்பை மற்றும் பிளாக், வைட் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கலாம் என்ற காரணங்களால் ஐபோன் X மாடலை விட 6.5 இன்ச் OLED ஐபோன் மாடலுக்கான வரவேற்பு அதிகமாக இருக்கும் என மிங் சி கியோ வெளியி்ட்டிருக்கும் அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
ஐபோன் 8 சீரிஸ்-ஐ விட புதிய 6.1 இன்ச் எல்சிடி ஐபோன் விற்பனை அதிகமாக இருக்கும் என்றும் இதற்கு ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஃபேஸ் ஐடி மற்றும் கிரே, வைட், புளு, ரெட் மற்றும் ஆரஞ்சு என ஐந்து வித நிறங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கலாம் என மிங் சி கியூ தெரிவித்திருக்கிறார்.