iPhone 16 pro huge discount and offer
Apple யின் அதன் லேட்டஸ்ட் iPhone 16 Pro ப்ளாக்ஷிப் போனில் 9,500ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனை பேங்க் ஆபர் மூலம் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் Big Savings Day sale 2025 இந்த போனில் ப்ரீமியம் டைட்டானியம் பில்ட் உடன் இதில் ஆப்பிள் இன்டலிஜன்ஸ் அம்சத்துடன் வருகிறது மேலும் ஆபர் விலை மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோவின் விலை தற்போது ரூ.1,12,900 ஆக உள்ளது, இது அசல் வெளியீட்டு விலையான ரூ.1,19,900 இலிருந்து நேரடி ரூ.7,000 விலை குறைப்பு. மேலும், HDFC வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்கள் ரூ.2,500 வங்கி தள்ளுபடியையும் பெறலாம். கஸ்டமர்கள் மாதத்திற்கு ரூ.18,817 யில் தொடங்கும் நோ-காஸ்ட் EMI-யையும் தேர்வு செய்யலாம், ஸ்டேடண்டர்ட் EMI ஆப்சனில் வாங்கலாம்.
மேலும் நீங்கள் இந்த போனை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் பழைய போனை கொடுத்து ரூ,65,200 விலையில் வாங்கலாம் ஆனால் அந்த போனின் மாடலை பொருத்தது மற்றும் அதன் வர்கிங் கண்டிசன் பொருத்தது மேலும் இதில் ரூ,5,000 எக்ஸ்சேஞ் போனஸ் வழங்குகிறது, கஸ்டமர்கள் நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் , கூடுதல் அம்சங்களாக AppleCare Protect- தேர்வு செய்யலாம்.
iPhone 16 Pro போனில் 6.3-இன்ச் Super Retina XDR டிஸ்ப்ளே உடன் ப்ரோமோஷன் ப்ரோடேக்சன் டெக்நோலோஜி உடன் இந்த போனில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது, மேலும் இது ஆல்வேஸ்-ஒன்-டிஸ்ப்ளே ஸ்மூத் விசுவல்ஸ் மிக சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.
இந்த போனில் ஆப்பிளின் அட்வான்ஸ்ட் A18 Pro சிப்பால் இயக்கப்படுகிறது, இது அப்டேட் செய்யப்பட்ட பர்போமன்சுக்காக இரண்டாம் ஜெனரேசன் 3nm தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது அப்டேட் செய்யப்பட்ட AI திறன்களுக்காக 16-கோர் நியூரல் எஞ்சினையும், மேம்பட்ட கேமிங் கிராபிக்ஸிற்கான வன்பொருள்-துரிதப்படுத்தப்பட்ட ரே டிரேசிங்குடன் 6-கோர் CPU மற்றும் 6-கோர் GPU ஐயும் கொண்டுள்ளது.
ஆப்பிள் சரியான பேட்டரி பவர் வெளியிடவில்லை என்றாலும், ஐபோன் 16 ப்ரோ அதன் முன்னோடியை விட 20% அதிக பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது.
ஐபோன் 16 ப்ரோவின் கேமரா அமைப்பில் குவாட்-பிக்சல் சென்சார் கொண்ட 48MP ஃப்யூஷன் பிரதான கேமரா, 48MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 12MP 5x டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். முதன்மை கேமரா டால்பி விஷனில் 4K 120 FPS வீடியோவையும் பதிவு செய்ய முடியும்.
இந்த ஆண்டின் தனித்துவமான அம்சம் கேமரா கட்டுப்பாடு ஆகும், இது சாதனத்தின் விளிம்பில் உள்ள ஒரு பிரத்யேக சென்சார் பொத்தான் வழியாக கேமரா அமைப்புகளுடன் உள்ளுணர்வுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது, இது பயன்பாட்டினை மேம்படுத்துகிறது.
இதையும் படிங்க Motorola யின் போனில் தரமான ஆபர் ரூ,5,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்