பல கலக்கலான அம்சங்களுடன் அறிமுகமான iPhone 15 சீரிஸ் ஆனா புதுசா பல அம்சம் இருக்கு
நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, ஐபோன் 15 சீரிஸ் இறுதியாக ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது
இதில் iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவை அடங்கும்.
ஆனால் விலை வேறு. இவற்றின் இந்திய விலை, முன்பதிவு மற்றும் விற்பனை தகவலை பற்றி தெரிந்து கொள்வோம்.
நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, ஐபோன் 15 சீரிஸ் இறுதியாக ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் சீரின் கீழ் 4 மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவை அடங்கும். ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவை அடிப்படை வேரியன்ட் ஆகும், அவை ஒரே மாதுரியான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது அதேசமயம் ப்ரோ வேரியண்டின் அம்சங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. ஆனால் விலை வேறு. இவற்றின் இந்திய விலை, முன்பதிவு மற்றும் விற்பனை தகவலை பற்றி தெரிந்து கொள்வோம்.
iPhone 15, iPhone 15 Plus யின் இந்திய விலை மற்றும் விற்பனை
இந்தியாவில் ஐபோன் 15 இன் 128ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.79,900. இதன் 256ஜிபி மற்றும் 512ஜிபி சேமிப்பு வகைகள் முறையே ரூ.89,900 மற்றும் ரூ.1,09,900க்கு கிடைக்கும்.
iPhone 15 Plus யின் 128GB, 256GB மற்றும் 512GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலைகள் பற்றி பேசினால் ரூ.89,900, ரூ.99,900 மற்றும் ரூ.1,19,900 ஆகும்.
இரண்டு ஐபோன்களுக்கும் இந்தியாவில் முன்பதிவு செப்டம்பர் 15 அன்று மாலை 5:30 மணிக்கு தொடங்கும், மேலும் அவை செப்டம்பர் 22 முதல் வாங்குவதற்கு கிடைக்கும்.
iPhone 15 Pro, iPhone 15 Pro Max விலை தகவல்
இந்தியாவில் ஐபோன் 15 ப்ரோவின் 128ஜிபி, 256ஜிபி, 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் வகைகளின் விலை ரூ.1,34,900, ரூ.1,44,900, ரூ.1,64,900 மற்றும் ரூ.1,84,900 ஆகும்.
அதேசமயம், iPhone 15 Pro Max யின் 256GB, 512GB மற்றும் 1TB ஸ்டோரேஜ் வகைகளின் விலைகள் ரூ.1,59,900, ரூ.1,79,900 மற்றும் ரூ.1,99,900 ஆகும்.
இரண்டு ஐபோன்களின் முன்பதிவு செப்டம்பர் 15, மாலை 5:30 முதல் தொடங்கும், மேலும் அவை செப்டம்பர் 22 முதல் வாங்குவதற்கு கிடைக்கும்.
அமெரிக்காவில் புதிய ஐபோன் 15 ப்ரோவின் விலை $ 999 ஆகவும் (சுமார் ரூ 82,800) ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் விலை $ 1,199 ஆகவும் (சுமார் ரூ 99,400) வைக்கப்பட்டுள்ளது.
iPhone 15, iPhone 15 Plus specifications and features
iPhone 15 யில் ஒரு டுயள் சிம் (நேனோ) ஸ்மார்ட்போன் ஆகும்,
இது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே மற்றும் கூடுதல் செக்யுரிட்டிகாக செராமிக் ஷீல்டு மெட்டீரியலைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு, ஆப்பிள் ஐபோன் 15 ஐ டைனமிக் ஐலண்டுடன் பொருத்தியுள்ளது, இது கடந்த ஆண்டு ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. டிஸ்ப்ளே 2000 nits ஹை ப்ரைட்னாஸ் சப்போர்ட் செய்கிறது மற்றும் போன டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிடண்டிர்க்கானIP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. அதே நேரத்தில், iPhone 15 Plus ஆனது 6.7 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு மாடல்களைப் போலல்லாமல், ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் ப்ரைமரி கேமரா 2um குவாட் பிக்சல் சென்சார் மற்றும் f/1.6 அப்ரட்ஜர் கொண்ட 48 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா ஆகும். ஸ்மார்ட்போனில் f/1.6 அப்ரட்ஜர் மற்றும் சென்சார் ஷிப்ட் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. கைபேசியின் முன்புறத்தில் 12 மெகாபிக்சல் TrueDepth கேமரா உள்ளது, இது புதிய கேமரா ஹைலேன்ட்பொருத்தப்பட்டுள்ளது.
ஆப்பிளின் புதிய ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் கடந்த ஆண்டு ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் இயங்கும் நிறுவனத்தின் A16 பயோனிக் சிப்பைக் கொண்டுள்ளது. இந்த போனில் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து USB Type-C போர்ட்டைப் பெற்ற முதல் போன்கள் எனக் கூறப்படுகிறது. இரண்டு போனிலும் உள்ள ரேம் அல்லது பேட்டரி பவர் பற்றி ஐபோன் தயாரிப்பாளர் எதுவும் கூறவில்லை.
iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max specifications and features
A17 Bionic சிப் மற்றும் Action Button இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்
iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவை முறையே 6.1-இன்ச் மற்றும் 6.7-இன்ச் Super Retina XDR OLED டிஸ்ப்ளேக்கள், ஆப்பிளின் செராமிக் ஷீல்ட் மெட்டீரியல் மற்றும் 2,000 nits ஹை ப்ரைட்ன்ஸ் சப்போர்ட் செய்கிறது இரண்டு போனிலும் டஸ்ட் மற்றும் வாட்டர் அப்டேட்டிற்கு IP68 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது இவை ஆப்பிளின் புதிய 3nm A17 பயோனிக் சிப்செட்டில் வேலை செய்கின்றன.
கிரேடு 5 டைட்டானியம் மற்றும் அலுமினியம் சப் ஸ்ட்ரக்ஜர் போன்களில் வலிமையை அதிகரிக்கவும், முன்பை விட இலகுவாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு புதிய ஏக்சன் பட்டனை வழங்குகிறது இது ம்யுட் ஸ்விட்ச்சுடன் பல செயல்பாடுகளைச் செய்ய கஷ்டமைஸ் செய்யலாம்.
போனின் 48 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் எஃப்/1.78 அப்ரட்ஜர் மற்றும் லென்ஸ் கண்ணை கூசுவதை குறைக்க ஒரு கோட்டிங் சேர்க்கப்பட்டுள்ளது. இது f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவையும் கொண்டுள்ளது. ஐபோன் 15 ப்ரோ 12 மெகாபிக்சல் 3x டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் 12 மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமரா செட்டிங் f/2.8 அப்ரட்ஜர் உடன் கொண்டுள்ளது, இது 5x ஆப்டிகல் ஜூம் பர்போமான்ஸ் வழங்கும் என்று கூறப்படுகிறது.
iPhone 15 சீரிச்ன் இந்த ப்ரோ மாடல்கள் முன்புறத்தில் 12-மெகாபிக்சல் ட்ரூடெப்த் கேமராவை f/1.9 அபெர்ச்சருடன் பெறுகின்றன, இது செல்ஃபிக் கிளிக் செய்வதற்கும் வீடியோ கால்களை செய்வதற்கும் பயன்படுத்தப்படலாம்.
வழக்கமான மாடல்களைப் போலவே, புதிய iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவை USB 3.0 வேகத்துடன் USB Type-C போர்ட்டுடன் வருகின்றன. இது ஒரு விருப்ப கேபிள் மூலம் 10 ஜிபிபிஎஸ் வரை டேட்டா ட்ரேன்ஸ்பர் ஸ்பீடை வழங்குகிறது. ஆப்பிளின் படி ஐபோன் 15 ப்ரோ முழு நாள் பேக்கபை வழங்குகிறது, அதே நேரத்தில் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இன்னும் நீண்ட பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, போனில் Qi2 ஸ்டேண்டர்ட் சப்போர்ட் செய்கிறது இது வேகமான வயர்லெஸ் சார்ஜிங் ஸ்பீடை வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile