ஐபோன் 13 விலை குறைப்பு வெறும் 45 ஆயிரத்திற்கு வாங்கலாம்.

ஐபோன் 13 விலை குறைப்பு வெறும் 45 ஆயிரத்திற்கு  வாங்கலாம்.
HIGHLIGHTS

ஐபோன் 13 மாடலுக்கு அமேசான் வலைதளத்தில் அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அமேசானில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனின் 128 ஜிபி மாடலின் விலை ரூ. 67 ஆயிரத்து 490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது

ஐபோன் 13 மாடலுக்கு அமேசான் வலைதளத்தில் அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி அமேசானில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனின் 128 ஜிபி மாடலின் விலை ரூ. 67 ஆயிரத்து 490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

இதே போன்று தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 22 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை அறிவிக்கப்பட்டஉ இருக்கிறது. அதன்படி தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை சேர்த்தால் ஐபோன் 13 மாடலை ரூ. 45 ஆயிரத்து 490 விலையில் வாங்கிட முடியும். இவை தவிர வியாபார பரிவர்த்தனைகளில் ஜிஎஸ்டி மூலம் 28 சதவீதம் வரை சேமிக்க முடியும்.

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 16.2 அப்டேட்டை வெளியிட்டது. இதில் ஏராளமான புது அம்சங்கள், மேம்பட்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, ஃபிரீடம் ஆப், ஆப்பிள் மியூசிக் சிங் மற்றும் 5ஜி போன்ற மிகமுக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் சில அம்சங்கள் புதிதாக வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், சில அம்சங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு தற்போது அவற்றில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

முன்னதாக 2021 ஐபோன் 13 மாடல் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஐபோன் ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா 2532×1170 பிக்சல் XDR OLED டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 13 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo