பெங்களூரில் தயாராகும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 பிளஸ்
ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து இந்தியர்களுக்கு கிடைக்கும் மிக சந்தோசமான விஷயம்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 பிளஸ் மாடலின் சோதனை தயாரிப்பானது, பெங்களூரில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தொடங்க உள்ளது.
பெங்களூரில் நடக்கும் இந்த டெஸ்ட் தயாரிப்பின் விளைவாக, இந்திய ஆப்பிள் பயனர்களுக்கு பல நன்மைகள் இருக்கும் விதமாக, ஐபோன் 6 ப்ளஸ் மாடல் இருக்கிறது. இது நல்ல விலைகுறைப்பு உடன் இருக்கலாம் என்று நிறுவனத்தின் இரண்டு மூத்த தொழில் நிர்வாகிகள் பதில் அளித்துள்ளனர்.
விஸ்டிரான் நிறுவனமானது, அதன் ஐபோன் 6 பிளஸ் உற்பத்தியை அடுத்த இரண்டு வாரங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாகிகளின் படி, உள்நாட்டில் நிகழும் இந்த உற்பத்தி காரணமான Iphone 6 Plus -சுமார் 5-7% வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"எனினும், இந்த விலை திருத்தம் உடனடியாக இருக்காது. ஏனெனில் தற்போது வரையிலாக விஸ்டிரான் நிறுவனத்தின் மூலம் ஐபோன் 6 பிளஸ்-ன் முழு இந்திய தேவையையும் பூர்த்தி செய்ய முடியவில்லை மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி தொடரும்" என்றும் நிறுவனத்தின் மூத்த தொழில் நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது உள்ளூர் உற்பத்தி திறன் அதிகரிக்கும் போது தான் விலைகள் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது .
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதின் விளைவாக தான், இந்திய மார்க்கெட்டில் , கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து ஐபோன் S E மாடலின் விலை குறைந்துள்ளது. இதே போன்ற விலைகுறைப்பை, மிக விரைவில் ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ் மாடல் மீதும் எதிர்பார்க்கலாம். என கூறப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile