உங்களின் ஐபோன் வாங்கும் கனவு நிறைவேற சூப்பர் வாய்ப்பு குறைந்த விலையில் வாங்கி செல்லலாம் .

Updated on 08-May-2023
HIGHLIGHTS

அமேசான் கிரேட் சம்மர் சேல் 2023 விற்பனை அமேசானில் தொடங்கியது

சமீபத்திய iPhone iPhone 14 மற்றும் iPhone 14 Pro Max யில் பம்பர் தள்ளுபடிகள் ஆபர் கிடைக்கின்றன.

மேலும், 10 சதவீத உடனடி தள்ளுபடியும் (ரூ. 1,000 வரை) கோடக் டெபிட் / கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் போன் வாங்கும் போது கிடைக்கும்

நீங்கள் குறைந்த விலையில் ஐபோன் வாங்க நினைத்திருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி  அமேசான் கிரேட் சம்மர் சேல் 2023 விற்பனை அமேசானில் தொடங்கியது. இந்த சேலில் ஐபோன் வாங்கினால் ரூ.35,000 வரை சேமிக்கலாம். சமீபத்திய iPhone iPhone 14 மற்றும் iPhone 14 Pro Max யில் பம்பர் தள்ளுபடிகள் ஆபர் கிடைக்கின்றன. …

ஐபோன் 14 ஐ குறைந்த விலையில் வாங்குவது எப்படி?

அமேசான் கிரேட் சம்மர் சேல் 2023 இல், ஐபோன் 14 இன் 128 ஜிபி வேரியண்ட் ரூ.79,900 விலையில் 15 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு ரூ.67,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 256 ஜிபி வேரியண்ட் ரூ.79,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது 128 ஜிபி வேரியண்டில் நேரடியாக ரூ.12,901 தள்ளுபடி பெறப்படுகிறது.

மேலும், 10 சதவீத உடனடி தள்ளுபடியும் (ரூ. 1,000 வரை) கோடக் டெபிட் / கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் போன் வாங்கும் போது கிடைக்கும். போனுடன் EMI விருப்பமும் உள்ளது. இது மட்டுமின்றி ஐபோன் 14 உடன் ரூ.21,700 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. பழைய போனை மாற்றினால் 20 ஆயிரத்திற்கும் மேல் மிச்சப்படுத்தலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மதிப்பு உங்கள் பழைய ஃபோனின் நிலை, மாடல் மற்றும் நிறுவனத்தைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளவும்.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸிலும் சலுகைகள் உள்ளன

iPhone 14 Pro Max ஐ அமேசான் விற்பனையில் குறைந்த விலையில் வாங்கலாம். ரூ.1,39,900 விலையுள்ள இந்த போன் 9 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு ரூ.1,27,999க்கு சேலில் பட்டியலிடப்பட்டுள்ளது.ஐபோன் 14 ப்ரோ மேக்ஸுடன் ரூ.21,700 எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் எளிதான EMI விருப்பங்களும் கிடைக்கின்றன. இதனுடன், கோடக் டெபிட் / கிரெடிட் கார்டு ட்ரெண்செக்சனில் 10% உடனடி தள்ளுபடி (ரூ. 1,000 வரை) பெறலாம். 

Apple iPhone 14 மற்றும் iPhone சிறப்பம்சம்.

ஆப்பிள் ஐபோன் 14 இன் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது தவிர, A15 பயோனிக் சிப்செட் உள்ளது. தொலைபேசியில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் இரண்டு லென்ஸ்களும் 12 மெகாபிக்சல்கள். ஒரு லென்ஸ் மிகவும் அகலமானது. போப்புடன் 5G துணைபுரிகிறது.

அதே நேரத்தில், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸில் 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே கிடைக்கிறது. பிரைட்னஸ் 2000 நிட்கள். iphone 14 pro Pro A16 சிப்செட் மற்றும் 48 மெகாபிக்சல் கேமரா அமைப்பு உள்ளது. இரண்டாவது லென்ஸ் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் மற்றும் மூன்றாவது லென்ஸ் 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகும். 12 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :