கேலக்சி S10 ரூ.9,099 செலுத்தி வாங்கி செல்லலாம் ஏர்டெல் அறிவிப்பு..!

Updated on 24-Feb-2019
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனத்தின் 2019 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி S10 மற்றும் கேலக்ஸி S10 பிளஸ் இந்திய விலை அறிவிக்கப்பட்டு முன்பதிவும் துவங்கியிருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் 2019 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி S10 மற்றும் கேலக்ஸி S10 பிளஸ் இந்திய விலை அறிவிக்கப்பட்டு முன்பதிவும் துவங்கியிருக்கிறது.  இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு எளிய மாத தவணை சலுகையை அறிவித்துள்ளது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. வேரியண்ட், கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜி.பி. வேரியண்ட் ஏர்டெல் தளத்தில் மாத தவணையில் வாங்கிட முடியும்.

ஏர்டெல் சலுகையில் கேலக்ஸி எஸ்10 128 ஜி.பி. வேரியண்ட் வாங்க ரூ.9,099, 512 ஜி.பி. வேரியண்ட் வாங்க ரூ.13,809 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலுக்கு ரூ.15,799 முன்பணமாக செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்பணம் செலுத்தி இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் 128 ஜி.பி. மாடலுக்கு மாதம் ரூ.2,999 தொகையை 24 மாதங்களுக்கும், 512 ஜி.பி. மாடலுக்கு ரூ.3,499 24 மாதங்களுக்கு தவணையாக செலுத்த வேண்டும். 

 

புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் சாதனத்தை ரூ.2999 எனும் சிறப்பு விலையிலும், கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலையில் வாங்கிட முடியும். இந்த சலுகையை பெற சாதனம் மார்ச் 6 முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அந்த வகையில் முன்பணம் மற்றும் தவணை தொகையை சேர்க்கும் போது கேலக்ஸி எஸ்10 128 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.81,075, கேலக்ஸி எஸ்10 512 ஜி.பி. விலை ரூ.97,785 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜி.பி. விலை ரூ.87,775 செலுத்துவர். 

கேலக்ஸி S10 அல்லது கேலக்ஸி எஸ்10 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 மற்றும் கேலக்ஸி எஸ்10இ வாங்குவோருக்கு ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் நிபந்தனைகளக்கு உட்பட்டு எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம்.

கேலக்ஸி S10  மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் முன்பதிவு பிப்ரவரி 22 ஆம் தேதி துவங்கி மார்ச் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என சாம்சங் அறிவித்துள்ளது. இவற்றின் விநியோகம் மார்ச் 6 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :