இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்மூலம் இணையப் பயன்பாடும் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி, சேதமடையும் டிவைச்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் மொபைலுக்கு சிறந்த ஆன்டி-வைரஸ் பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்
இதற்கான மார்க்கெட்டில் ஏராளமான ஆன்டி-வைரஸ்கள் சலுகைகளை வாரி இறைக்கின்றன. அவற்றில் நமது சாதனத்திற்கு ஏற்றவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.
இந்நிலையில் ஏர்செல் நிறுவனம், அவாஸ்ட் (Avast) ஆன்டி-வைரஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்மூலம் வாடிக்கையாளர்களின் டேட்டா செயல்திறன், சிறந்த தகவல் பரிமாற்றம், போதிய பாதுகாப்பு வசதி உள்ளிட்டவற்றை பெறலாம்.
உலகம் முழுவதும் 40 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஏர்செல், அவாஸ்ட் உடன் இணைந்து 80 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வசதியை அளிக்க திட்டமிட்டுள்ளது.
திட்டங்கள்:
ரூபாய்.30 – மாதச் சந்தா
ரூபாய்.205 – ஆண்டுச் சந்தா
ரூபாய்.30 – ஏர்செல் கிளீனர்