ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோனில் வாட்ஸ்அப் வசதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதில் பல் வேறு அம்சங்களையும் வழங்கப்பட்டுள்ளது இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் நோக்கியா 8110 4ஜி மொபைல் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
நோக்கியா 8110 4ஜி போனில் வாட்ஸ்அப் வசதி வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியை பயனர்கள் சோஷியல் டேபில் இருக்கும் ஆப் ஸ்டோர் சென்று டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த செயலி கை ஓ.எஸ். தளத்துக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஃபீச்சர் போன்களுக்கென உருவாக்கப்பட்டிருப்பதால், இந்த செயலி சீராக இயங்கும்.
நோக்கியா 8110 4ஜி மொபைலில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகள் வழங்கப்பட்டுள்ளது. நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 8110 4ஜி மொபைலில் 2.4 இன்ச் QVGA வளைந்த டிஸ்ப்ளே, இன்ட்யூட்டிவ் டேக்டைல் மெக்கானிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கும் ஸ்லைடரை பயன்படுத்தலாம்.
இந்தியாவில் நோக்கியா 8110 4ஜி போன் ரூ.5,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு தற்சமயம் ரூ.4,999 விலையில் நோக்கியா இந்தியா ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.