நவம்பர் 7 முதல் ஆப்பிள் ஐபோனில் 5ஜி சேவை கிடைக்கும். ஐபோன் பயனர்கள் iOS 16 பீட்டா சாப்டவெர் ப்ரோக்ராம் மூலம் 5G வசதியைப் பெறுவார்கள். தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 5G சாப்டவெர் அப்டேட் மூலம் இயக்கப்படும் மற்றும் டிசம்பரில் அனைத்து ஐபோன்களிலும் வெளியிடப்படும்.
நெட்வொர்க் சரிபார்ப்பு மற்றும் தரம் மற்றும் செயல்திறனுக்கான சோதனை முடிந்தவுடன், ஐபோன் பயனர்களுக்கு சிறந்த 5G அனுபவத்தை வழங்க இந்தியாவில் உள்ள தனது கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க அவர்களின் ஆலோசனைகளை நாடியுள்ளது.
பீட்டா சாப்ட்வெர் திட்டத்தில் பங்கேற்கும் ஏர்டெல் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்கள் அப்டேட் செய்த பிறகு 5ஜியை முயற்சிக்க முடியும். iPhone-14, iPhone-13, iPhone-12 மற்றும் iPhone SE (3வது தலைமுறை) மாடல்களைப் பயன்படுத்தும் பயனர்கள் 5Gக்கான பீட்டா சாப்ட்வெர் ப்ரோக்ராம் அணுகலாம்