5.5- அங்குல காட்சித்திரை, 4ஜிபி தற்காலிக நினைவகம் கொண்ட சியோமி எம்ஐ 5 நவம்பரில் வெளிவர இருக்கிறதா?

5.5- அங்குல காட்சித்திரை, 4ஜிபி தற்காலிக நினைவகம் கொண்ட சியோமி எம்ஐ 5 நவம்பரில் வெளிவர இருக்கிறதா?
HIGHLIGHTS

சியோமி எம்ஐ 5, 5.5-அங்குல நான்கு மடங்கு உயர் வரையறை காட்சித்திரை, 4ஜிபி தற்காலிக நினைவகம் மற்றும் ஸ்நாப்டிராகன் 820 சிப் அமைப்பு ஆகியவற்றை கொண்டிருக்கும் என வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளன.

சியோமி அதன் அடுத்த பிரதான கருவியான எம்ஐ-5 குறித்து முயற்சிகள் செய்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த கருவி 4ஜிபி தற்காலிக நினைவகம் மற்றும் ஸ்நாப்டிராகன் 820 க்வால்காம் செயலி கொண்டிருக்கும். 

சீன இணையத்தளமான, ஐடி168 செய்திபடி, சியோமி எம்ஐ5 இந்த ஆண்டு நவம்பரில் வெளி வர இருக்கிறது. இந்த கைப்பேசி, க்வால்காம் ஸ்நாப்டிராகன் 820 சிப் அமைப்பு மற்றும் 16/64 ஜிபி உள் சேமிப்பு நினைவகம் கொண்டிருக்கும்.இது 1440 x 2560 படவரைப்புள்ளி ரெசொலுஷன் கொண்ட 5.5-அங்குல நான்கு மடங்கு உயர வரையறை காட்சித்திரையொடு இருக்கும்.மேலும் வெளிவரும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள்,மீயொலி கைரேகை அடையாளம் காணும் அம்சம் இருப்பதாக தெரிவிக்கின்றன. இதற்கு கருவியில் எந்த இடத்திலும் விசை இருக்க வேண்டிய தேவையில்லை. மேலும் இதில் 16 எம்பி பின்பக்க கேமராவும், 8 எம்பி முன் பக்க கேமராவும், யூஎஸ்பி வகையை சேர்ந்த சி இணைப்பு கம்பியும், 3000 எம்ஏஹெச் பேட்டரியும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அலுமினியத்தில் செய்யப்பட இருக்கும் இந்த கருவி, மெலிதான 5.1 எம்எம் சட்டம் கொண்டிருக்கும்.

முன்னம் வந்த அறிக்கைகள், வெளிவரவிருப்பதாய் பேசப்படும் எம்ஐ 5 பிளஸ் ஃபேப்லட், 6 அங்குல நான்கு மடங்கு உயர் வரையறை கொண்ட, விளிம்புக்கும் திரைக்கும் இடைவெளி இல்லாத காட்சித்திரை கொண்ருக்கும் என குறிப்பிட்டிருந்தன. மேலும் இந்த கருவி 4ஜிபி தற்காலிக நினைவகம், 32 ஜிபி உள் சேமிப்பு நினைவகம், 16 எம்பி முதன்மை கேமரா ஆகியவை கொண்டிருக்கும்.நவம்பரில் வெளி வர இருக்கும் எம்ஐ 5 உடன் சேர்த்து எம்ஐ 5 பிளஸ்-உம் வெளியிடப்படும்.  இது தவிர, சியோமி புதிய எம்ஐ 4எஸ் கருவிக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது சென்ற வருடம் வெளி வந்த பிரதான ஸ்மார்ட் கைப்பேசியின் புதிய பதிப்பாகும்.இதில் மேம்படுத்தப்பட்ட 810 சிப் அமைப்பு ,பதியப்படும் படங்களை சீர் செய்யும் தொழில்நுட்பமான ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைஷேஷன் கொண்ட13 எம்பி முதன்மை கேமரா, மற்றும் சில முன்னேற்றங்களும் உள்ளன. ஜூலை 15 அன்று ஸ்மார்ட் கைப்பேசி வெளிக்கொணரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

சியோமி, எம்ஐ 4ஐ கைப்பேசியை இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் ரூ. 12,999 –க்கு வெளியிட்டது. இந்த கைப்பேசி 5-அங்குல முழு உயர் வரையறை காட்சித்திரை கொண்டிருக்கிறது. அண்ட்ராய்ட் லாலிபாப் இயங்குதளம் அடிப்படையாக உள்ள இதில், புதிய எம்ஐ பயனர் முகப்பின் 6-ஆம் பதிப்பு மேல் படிவமாக உள்ளது.

ஸ்மார்ட் கைப்பேசி ஹிந்தி, தெலுங்கு, கன்னடா உட்பட ஆறு இந்திய மொழிகளுக்கு ஆதரவு தருகிறது. எட்டு உள்ளகம் கொண்ட, 64 பிட், ஸ்நாப்டிராகன் 615 செயலியும், 2ஜிபி தற்காலிக நினைவகமும் கருவிக்கு ஆற்றல் அளிக்கின்றன. இது இரு தொனி மின்வெட்டோளி கொண்ட 13எம்பி முதன்மை காமெராவும், 5 எம்பி முன் பக்க கேமராவோடும் இருக்கிறது.வெளித்தொடர்பு வசதிக்காக சியோமி எம்ஐ 4ஐ-இல், ஒரு சமயத்தில் ஒரு சிம் பயன்பாடு அளிக்கும் இரு-சிம் ஆதரவு நிலை, 4ஜி, 3ஜி, வை-ஃபை,ப்ளுடூத் 4.1 மற்றும் யூஎஸ்பி ஆதரவு ஆகியன உள்ளன. மேலும் இதில் உள்ள 3120 எம்ஏஹெச் பேட்டரி 1.5 நாட்களுக்கு ஆற்றல் அளிக்க வல்லது என நிறுவனம் கூறுகிறது.

ஆதாரம்:போன்அரீனா, மொபைல்டாட் 

Silky Malhotra

Silky Malhotra

Silky Malhotra loves learning about new technology, gadgets, and more. When she isn’t writing, she is usually found reading, watching Netflix, gardening, travelling, or trying out new cuisines. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo