Xiaomi நிறுவனம் 12.5 இன்ச் டிஸ்ப்ளே உடன் Mi நோட்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய நோட்புக் மாடல் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்டுள்ளது. சியோமியின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் ஜெ.டி. வெப்சைட்களில் புதிய Mi நோட்புக் முன்பதிவு செய்யப்படுகிறது.
பிராசஸர் தவிர புதிய Mi நோட்புக் மாடலில் 4 ஜி.பி. ரேம், 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் அதிகபட்சம் 256 ஜி.பி. ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இதன் விலை CNY 3,999 (இந்திய மதிப்பில் ரூ.40,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Xiaomi Mi நோட்புக் ஏர் சிறப்பம்சங்கள்:
– 12.5 இன்ச் 920×1080 பிக்சல் டிஸ்ப்ளே
– விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்
– இன்டெல் கோர் ஐ5 பிராசஸர்
– இன்டெல் HD.கிராஃபிக்ஸ் 615
– 4 ஜி.பி. ரேம்
– 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
– ஸ்டோரேஜ் கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 1 எம்.பி. வெப் கேமரா
– 8 மணி நேர வீடியோ பிளேபேக்
– 1சி ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
– USB டைப்-சி போர்ட்
– USB 3.0 போர்ட்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– ப்ளூடூத் 4.1, வைபை 802.11ac
விலை
சியோமி Mi நோட்புக் ஏர் ஜஸ்ட் சில்வர் கலர் வேரியன்ட் தற்சமயம் முன்பதிவு செய்யப்படுகிறது. முதற்கட்டமாக CNY 100 செலுத்தி பயனர்கள் தங்களுக்கான நோட்புக் மாடலை முன்பதிவு செய்யலாம்.