Xiaomi Mi நோட்புக் ஏர் 12.5 இன்ச் டிஸ்பிளே உடன் அறிமுகம்…!

Xiaomi  Mi நோட்புக் ஏர்  12.5 இன்ச் டிஸ்பிளே உடன் அறிமுகம்…!
HIGHLIGHTS

பிராசஸர் தவிர புதிய Mi நோட்புக் மாடலில் 4 ஜி.பி. ரேம், 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் அதிகபட்சம் 256 ஜி.பி. ஸ்டோரேஜ் கொண்டுள்ளது

Xiaomi  நிறுவனம் 12.5 இன்ச் டிஸ்ப்ளே உடன் Mi நோட்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய நோட்புக் மாடல் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்டுள்ளது. சியோமியின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் ஜெ.டி. வெப்சைட்களில் புதிய Mi நோட்புக் முன்பதிவு செய்யப்படுகிறது.

பிராசஸர் தவிர புதிய Mi நோட்புக் மாடலில் 4 ஜி.பி. ரேம், 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் அதிகபட்சம் 256 ஜி.பி. ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இதன் விலை CNY 3,999 (இந்திய மதிப்பில் ரூ.40,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Xiaomi Mi நோட்புக் ஏர் சிறப்பம்சங்கள்:

– 12.5 இன்ச் 920×1080 பிக்சல் டிஸ்ப்ளே
– விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்
– இன்டெல் கோர் ஐ5 பிராசஸர்
– இன்டெல் HD.கிராஃபிக்ஸ் 615
– 4 ஜி.பி. ரேம்
– 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
– ஸ்டோரேஜ் கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 1 எம்.பி. வெப் கேமரா
– 8 மணி நேர வீடியோ பிளேபேக்
– 1சி ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
– USB டைப்-சி போர்ட்
– USB 3.0 போர்ட்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– ப்ளூடூத் 4.1, வைபை 802.11ac

விலை 

சியோமி Mi நோட்புக் ஏர் ஜஸ்ட் சில்வர் கலர் வேரியன்ட் தற்சமயம் முன்பதிவு செய்யப்படுகிறது. முதற்கட்டமாக CNY 100 செலுத்தி பயனர்கள் தங்களுக்கான நோட்புக் மாடலை முன்பதிவு செய்யலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo