ஒரு செகெண்ட்-ஹேண்ட் லேப்டாப் இவ்வளவு கோடிக்கணக்களவில் விற்பனையாகுமா ?

Updated on 30-May-2019
HIGHLIGHTS

இந்த நிறுவனம் இணையம் மூலம் நிஜ உலகில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க குவோவுடன் இணைந்து பணியாற்றியது. இதற்கு அந்நிறுவனம் குவோவிற்கு மால்வேர் சார்ந்த உதவிகளையும் வழங்கியது.

2008 யில் ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட ஒரு லேப்டாப்பை  ரூ.9 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார், மேலும் இவர் வாங்கி இருக்கும். லேப்டாப்பில் தீங்கு விளைவிக்கும் உலகின் மிக மோசமான மென்பொருள் நிறுவப்பட்டு இருக்கிறது.

தி பெர்சிஸ்டன்ஸ் ஆஃப் சௌஸ் (The Persistence of Chaos) என அழைக்கப்படும் இந்த மென்பொருளை சீனாவை சேர்ந்த இணைய நிபுணர் குவோ ஒ டாங் என்பவர் உருவாக்கினார். இதற்கு நியூ யார்க்கை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான டீப் இன்ஸ்டின்க்ட் நிதியுதவி வழங்கியிருக்கிறது.

இந்த நிறுவனம் இணையம் மூலம் நிஜ உலகில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க குவோவுடன் இணைந்து பணியாற்றியது. இதற்கு அந்நிறுவனம் குவோவிற்கு மால்வேர் சார்ந்த உதவிகளையும் வழங்கியது.

"கம்ப்யூட்டர்கள் உண்மையில் நம்மை பாதிக்காது என்ற மாயை நம்மிடம் இருக்கிறது. ஆனால் இது முற்றிலும் முரணான ஒன்றாகும். ஆயுதப்படுத்தப்பட்ட வைரஸ்கள் மின் இணைப்புகளை தாக்கி நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை," என குவோ தெரிவித்தார்.

மால்வேர் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க தேவையான வழிமுறைகளை பின்பற்றியதாக குவோ மற்றும் டீப் இன்ஸ்டின்க்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் மற்ற நெட்வொர்க்களுடன் இணையாமல் இருக்க ஏர்-கேப் செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ்கள் மற்ற கம்ப்யூட்டர்களை பாதிக்காமல் இருக்கும். இதனை வாங்கியவருக்கு அனுப்பும் போது இதன் இணைய வசதிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விடும்.

இந்த வைரஸ்களின் பெயர்கள் பெரும்பாலும் பாப் பாடல்களின் தலைப்புகளாகவே கருதப்படுகின்றன. இதுவரை சுமார் 9500 கோடி டாலர்கள் அளவு பொருளாதார இழப்பை இவை ஏற்படுத்தி இருக்கின்றன. 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ரேன்சம்வேர் தாக்குதல் 150 நாடுகளில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிக கம்ப்யூட்டர்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த மால்வேரில் வைரஸ்கள், வொர்ம்கள், ஸ்பைவேர், ரேன்சம்வேர் மற்றும் பல்வேறு இதர தீங்கிழைக்கும் குறியீடுகள் (தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும் வகையில் உருவாக்கப்படுவது) உள்ளிட்டவை நிறைந்திருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :