பிங்கர் பிரிண்ட் ஸ்கானர் வசதியுடன் சாம்சங் நோட்புக் ஸ்பின் (2018) அறிமுகம் ஆகிறது

Updated on 09-Jan-2018
HIGHLIGHTS

சாம்சங் நோட்புக் ஸ்பின் (2018) டிவைஸ் பொதுவாக 13.3-இன்ச் முழு HD பிளஸ் டச்ஸ்க்ரீன் கொண்ட டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோட்புக் ஸ்பின் (2018) மாடலை சாம்சங் நிறுவனம் தற்சமயம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த டிவைஸ் பொறுத்தவரை நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வெளிவந்துள்ளது.

சாம்சங் நோட்புக் ஸ்பின் (2018) சாதனம் பொறுத்தவரை 256 ஜிபி SSD டிரைவ் மற்றும் விண்டோஸ் 10 ஒபரேட்டிங் சிஸ்டம்  வழங்கப்பட்டிருப்பதோடு லாக்இன் செய்ய விண்டோஸ் ஹெல்லோ மூலம் பிங்கர்பிரிண்ட் ஸ்கானர் வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது. 

சாம்சங் நோட்புக் ஸ்பின் (2018) டிவைஸ் பொதுவாக 13.3-இன்ச் முழு HD பிளஸ் டச்ஸ்க்ரீன் கொண்ட டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. அதன்பின்பு 18.5mm இருக்கும் நோட்புக் 7 ஸ்பின் (2018) பொறுத்தவரை 1.53 கிலோ எடை கொண்டுள்ளது. 

இந்த சாதனம் 360 கோணத்தில் வளைக்கக்கூடிய டச்ஸ்க்ரீன் வசதி கொண்டுள்ளது, அதன்பின்பு 8-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் மற்றும் 8ஜிபி மெமரி உள்ளிட்டவை இவற்றில் இடம்பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்த ஆக்டிவ் பென் சப்போர்ட் இவற்றில் இடம்பெற்றுள்ளது, ஆனால் இதற்கு தனியே பணம் செலுத்த வேண்டும்.

சாம்சங் நோட்புக் ஸ்பின் (2018) சாதனத்தில் ஸ்டூடியோ பிளஸ் வசதி இடம்பெற்றுள்ளது, இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை கொண்டு மிக எளிமையாக திரைப்படங்களை உருவாக்க முடியும். USB Type-C, USB 3.0 O1, USB 2.0 O1 e and HDMI HP போன்ற பல்வேறு கனெக்ட்  சப்போர்ட்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது, 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :