Samsung Galaxy Book,S 13.3 இன்ச் ஃபுல் HD, டச் டிஸ்ப்ளே உடன் அறிமுகம்.

Updated on 09-Aug-2019

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி புக் எஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய சாதனம் விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் ஸ்னாப்டிராகன் 8cx பிராசஸர் கொண்டிருக்கிறது.

Samsung Galaxy Book,S சிறப்பம்சங்கள்:

– 13.3 இன்ச் 1920×1080 பிக்சல் FHD TFT (16:9) 10-பாயின்ட் மல்டி-டச் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8cx  7 என்.எம். பிராசஸர்
– 8 ஜி.பி. (LPDDR4X)  ரேம் 
– 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– விண்டோஸ் 10 ஹோம் / ப்ரோ
– 720 பிக்சல் ஹெச்.டி. கேமரா
– கைரேகை மூலம் விண்டோஸ் ஹெல்லோ சைன்-இன் வசதி
– கைரேகை சென்சார், ஹால் சென்சார், லைட் சென்சார்
– ஏ.கே.ஜி. ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம்
– 4ஜி எல்.டி.இ. கேட்.18, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் – சி
– 42Wh பேட்டரி

இதில் 13.3 இன்ச் ஃபுல் HD, டச் டிஸ்ப்ளே, பிரத்யேக ஆர்ச் ஃபிரேம் சாதனத்தை திறக்கும் போதும், மூடும் போது பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. இதன் மேல்புறம் பிரீமியம் அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 6.2mm . அளவு தடிமனாக இருக்கிறது. 

கேலக்ஸி புக் எஸ் சாதனத்தில் பிங்கர்ப்ரின்ட் மூலம் விண்டோஸ் ஹெல்லோ இன்ஸ்டன்ட் சைன்-இன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.கே.ஜி. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 23 மணி நேர பேக்கப் வழங்குகிறது. 

சாம்சங் கேலக்ஸி புக் எஸ் எர்தி கோல்டு மற்றும் மெர்குரி கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 70,835) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :