சாம்சங் நிறுவனம் கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளதுகேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா மாடலில் கூர்மையான டைமண்ட் கட் எட்ஜ் மற்றும் உறுதியான அலுமினியம் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது.. புதிய கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் மாடலில் 13.3 இன்ச் QLED டிஸ்ப்ளே, மிக மெல்லிய பெசல், எடை குறைந்த வடிவமைப்பு கொண்டிருக்கிறது.
– 13.3 இன்ச் QLED 1920×1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
– 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர், இன்டெல் UHD கிராஃபிக்ஸ்
– 8 ஜி.பி. / 12 ஜி.பி. DDR4 ரேம்
– 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 720பிக்சல் ஹெச்.டி. கேமரா, டூயல் அரே டிஜிட்டல் மைக்
– ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (1.5 W x 2)
– ஆக்டிவ் பென் வசதி
– கைரேகை சென்சார்
– வைபை 6 (Gig+), 802.11ax 2×2, யு.எஸ்.பி.-சி, 2 x யு.எஸ்.பி. 3.0, HDMI
– 54 Wh பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
புதிய சாம்சங் லேப்டாப் மாடலில் 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர், ஆக்டிவ் பென் வசதி வழங்கப்பட்டுள்ளது. 17.5 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய லேப்டாப்பில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசிதயும் வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா லேப்டாப் ராயல் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 829.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 59,411) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் துவங்கும் என தெரிகிறது.