Nokia PureBook X14 லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சம் தெரிஞ்சிக்கோங்க.

Updated on 14-Dec-2020
HIGHLIGHTS

இந்தியாவில் நோக்கியா பிராண்டின் முதல் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப் மேட் பிளாக் பினிஷ் கொண்டிருக்கிறது. இதன் முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தியாவில் நோக்கியா பிராண்டின் முதல் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய லேப்டாப் 14 இன்ச் புல் ஹெச்டி ஸ்கிரீன், டால்பி விஷன், அல்ட்ரா வைடு பிக்சர் தரம், இன்டெல் ஐ5 10 ஆம் தலைமுறை குவாட்கோர் பிராசஸர், 8 ஜிபி ரேம், 512 ஜிபி NVMe SSD வழங்கப்பட்டு இருக்கிறது.

நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 சிறப்பம்சங்கள்

– 14 இன்ச் 1920×1080 பிக்சல் FHD எல்இடி பேக்லிட் IPS டிஸ்ப்ளே, டால்பி விஷன்
– 1.6 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ5-10210U பிராசஸர்
– இன்டெல் UHD கிராபிக்ஸ் 620
– 8 ஜிபி DDR4 2666MHz ரேம்
– 512 ஜிபி NVMe எஸ்எஸ்டி மெமரி
– ஹெச்டி ஐஆர் வெப்கேமரா
– பில்ட்-இன் டூயல் மைக்ரோபோன்
– பேக்லிட் கீபோர்டு
– விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்
– வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி 3.1 x2 / யுஎஸ்பி 2.0 x 1 / யுஎஸ்பி டைப் சி 3.1 x1
– HDMI x 1, RJ45 x 1, ஆடியோ அவுட் x 1, மைக் இன் x 1
– டூயல் ஸ்பீக்கர்கள், ரியல்டெக் ஹெச்டி ஆடியோ, டால்பி அட்மோஸ்
– 46.7Wh பேட்டரி
– 65 வாட் சார்ஜிங் 

இத்துடன் ஹெட்போன்களுக்கு டால்பி அட்மோஸ் வசதி, விண்டோஸ் 10, ஹெச்டி ஐஆர் வெப்கேமரா, விண்டோஸ் ஹெலோ பேஸ் அன்லாக், பேக்லிட் கீபோர்டு, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரைட்னஸ், பிரெசிஷன் டச்பேட் மற்றும் பல்வேறு ஜெஸ்ட்யூர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

விலை மற்றும் விற்பனை தகவல்

நோக்கியா பியூர்புக் எக்ஸ்14 லேப்டாப் மேட் பிளாக் பினிஷ் கொண்டிருக்கிறது. இதன் முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :