நோக்கியா ஒரே நேரத்தில் மூன்று லேப்டாப்பை அறிமுகப்படுத்தியது.
ஸ்மார்ட்போன் ப்ரண்டான நோக்கிய அதன் புதிய லேப்டாப் Nokia PureBook சீரிஸ் அறிமுகப்படுத்தியது.
இந்த லேப்டாப் தொடர் IFA 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது
இது 8 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜுடன் வருகிறது. இன்டெல் கோர் i3 செயலி PureBook Pro 15.6 இல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் ப்ரண்டான நோக்கிய அதன் புதிய லேப்டாப் Nokia PureBook சீரிஸ் அறிமுகப்படுத்தியது. இந்த லேப்டாப் தொடர் IFA 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் சீரிஸின் கீழ், PureBook Fold, PureBook Lite மற்றும் PureBook Pro 15.6 (2022) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. PureBook Fold லேப்டாப்பில் 14.1-இன்ச் முழு HD பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது, இதை 360 டிகிரி வரை சுழற்ற முடியும். Nokia PureBook Fold மற்றும் PureBook Lite மடிக்கணினிகள் Intel Pentium Silver N6000 செயலியைப் பெறுகின்றன, இது 8 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜுடன் வருகிறது. இன்டெல் கோர் i3 செயலி PureBook Pro 15.6 இல் கொடுக்கப்பட்டுள்ளது.
நோக்கியா பியுர்புக் போல்டு மற்றும் பியுர்புக் லைட் மாடல்களில் 14 இன்ச் டிஸ்ப்ளே, பியுர்புக் ப்ரோ மாடலில் 15.6 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. போல்டு மற்றும் லைட் மாடல்களில் இண்டெல் பெண்டியம் சில்வர் N6000, பியுர்புக் ப்ரோ மாடலில் இண்டெல் கோர் i3 1220P பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏஎம்டி நிறுவனத்தின் ரைசன் 5000 பிராசஸரை விட இண்டெல் கோர் i3 சக்திவாய்ந்த பிராசஸர் ஆகும்.
மூன்று லேப்டாப் மாடல்களிலும் FHD IPS ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட், 1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பியுர்புக் போல்டு மாடலில் டச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. நோக்கியா பியுர்புக் சீரிஸ் மாடல்களில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, வைபை 5 வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி 3.2 (x2), யுஎஸ்பி ஏ 3.2 (x1) போர்ட்கள், 3.2 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த மாடல்களில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், கைரேகை சென்சார், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் போல்டு மற்றும் லைட் மாடல்களில் 128 ஜிபி எஸ்எஸ்டி, பியுர்புக் ப்ரோ மாடலில் 512 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டு இருக்கிறது. பியுர்புக் லைட் எடை 1.47 கிலோ ஆகும். பியுர்புக் போல்டு 2.5 கிலோவும், பியுர்புக் ப்ரோ எடை 2.0 கிலோ ஆகும். இதன் ப்ரோ மாடலில் 2MP கேமரா, அலுமினியம் டாப் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
நோக்கியா பியுர்புக் சீரிஸ் விண்டோஸ் 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இதன் ப்ரோ மாடலில் நான்கு ஸ்பீக்கர் சிஸ்டம், சிறிய மாடல்களில் 2 ஸ்பீக்கர் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படுவது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதே மாதத்தில் பிரான்ஸ் நாட்டில் அறிமுகமாவது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
சிறிய மாடல்களில் 1MP கேமரா மற்றும் பிளாஸ்டிக் பிரேம் வழங்கப்பட்டு உள்ளது. 15.6 இன்ச் மாடலில் பேக்லிட் கீபோர்டு, 57Wh பேட்டரி மற்றும் 65 வாட் சார்ஜிங் இடம்பெற்று இருக்கிறது. லைட் மற்றும் போல்டு மாடல்களில் 38Wh பேட்டரி மற்றும் 44 வாட் பவர் அடாப்டர் வழங்கப்பட்டு உள்ளது. 14 இன்ச் மாடல்களை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் எட்டு மணி நேரம் வரை பயன்படுத்தலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile