ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய மேக் மினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது புதிய போர்டபிள் கம்ப்யூட்டரில் 8ம் தலைமுறை பிராசஸர்கள் அதிகபட்சம் 8 கோர்களுடன் வழங்கப்பட்டுள்ளது.
இதனுடன் இதில் அதிகபட்சம்ரேம் வகையான 64 ஜி.பி. ரேம் மற்றும் 2000 ஜி.பி. SSD . மெமரி வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இந்த புதிய மேக் மினி மாடலிலும் ஆப்பிள் டி2 செக்யூரிட்டி சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.
மேக் மினி சிறப்பம்சங்கள்:
– 8ம் தலைமுறை பிராசஸர்
– 4, 6 மற்றும் 8 கோர்
– 64 ஜி.பி. ரேம்
– 2000 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
– ஆப்பிள் டி2 செக்யூரிட்டி சிப்செட்
– ஈத்தர்நெட், தன்டர்போல்ட் 3
புதிய மேக் மினி மாடலில் ஜிகாபிட் ஈத்தர்நெட் போர்ட் மற்றும் தன்டர்போல்ட் 3 கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய மேக் மினி பேஸ் வேரியன்ட் மாடலில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை
ஸ்பேஸ் கிரே கலரில் கிடைக்கும் புதிய மேக் மினி மாடலில் 4, 6 மற்றும் 8 கோர் பிராசஸர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் புதிய மேக் மினி விலை 799 டாலர்கள் முதல் துவங்குகிறது. இதன் விற்பனையும் புதிய மேக்புக் ஏர் போன்றே நவம்பர் 7ம் தேதி துவங்குகிறது.