ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ப்ரோ லேப்டாப் மேம்படுத்தப்பட இருக்கிறது. புதிய மேக்புக் ப்ரோ மாடல்களில் சக்திவாய்ந்த அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.
தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய 2020 மேக்புக் ப்ரோ மாடலில் 32 ஜிபி ரேம், 4000 ஜிபி மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
2020 மேக்புக் ப்ரோ மாடலில் 13 இன்ச் அளவில் உருவாகி இருக்கும் என்றும் இதில் அதிகபட்சமாக 4000 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர இன்டெல் கோர் ஐ7 பிராசஸர், 32 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் விலை குறைந்த மாடலில் ஐ5 பிராசஸர் வழங்கப்படலாம்.
2019 மேக்புக் ப்ரோ வேரியண்ட் 13 இன்ச் மாடல்களில் 8 ஜிபி ரேம், 16 இன்ச் மாடல்களில் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 512 ஜிபி மெமரி, 16 இன்ச் மாடலில் அதிகபட்சம் 1000 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களில் 2020 மேக்புக் ப்ரோ மாடலில் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர், 32 ஜிபி ரேம், 2000 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்படும் என கூறப்படுகிறது.