லெனோவோ இந்தியா நிறுவனம் யோகா 9i, 2-இன்-1 லேப்டாப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. யோகா சிரிசில் அறிமுகமாகி இருக்கும் புது 2-இன்-1 லேப்டாப் 13th Gen இண்டெல் கோர் பிராசஸர் மற்றும் இண்டெல் இவோ சான்று பெற்று இருக்கிறது.
லெனோவோ யோகா 9i 2-இன்-1 லேப்டாப்கள் ஸ்டாம் கிரே மற்றும் ஓட்மீல் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 74 ஆயித்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை லெனோவோ, க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. ஜனவரி 29 ஆம் தேதி முதல் அமேசான் தளத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
புதிய லெனோவோ யோகா 9i மாடலை- லேப்டாப், ஸ்டாண்ட், டெண்ட் அல்லது டேப்லெட் என நான்கு விதமாக பயன்படுத்த முடியும். இதில் 14-இன்ச் OLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 4K ரெசல்யூஷன் வசதி, டால்பி விஷன் சான்று வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் லெனோவோ பிரெசிஷன் பென் 2 வழங்கப்படுகிறது. இதில் உள்ள 13th Gen இண்டெல் கோர் i7-1360P பிராசஸர், 16 ஜிபி LPDDR5 5 ரேம், 1 டிபி M.2 எஸ்எஸ்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் 2MP ஹைப்ரிட் FHD/ இன்ஃப்ராரெட் கேமரா, ஸ்மார்ட் ஃபேஷியல் ரெகோக்னிஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 75 வாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது