Huawei யின் அதன் ப்ரீ MWC நிகழ்வில் ப்ளாக்ஷிப் லேப்டாப் Matebook X Pro அறிமுகம் செய்துள்ளது. Huawei Matebook X Pro கடந்த வருடம் இதே நேரத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது, இது நிறுவனத்தின் டாப் எண்ட் லேப்டாப்பின் அடுத்த ஜெனரேஷன் யின் லேப்டாப்பாக இருக்கிறது.
புதிய மேட்புக் எக்ஸ் ப்ரோ 2019 மாடலில் 13.9 இன்ச் 3K LTPS ஃபுல்வியூ டிஸ்ப்ளே, 14.6 அளவில் மெல்லிய மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் மற்றும் NVIDIA GeForce MX250 GPU கிராஃபிக்ஸ் வசதியுடன் வருகின்றது.
புதிய லேப்டாப்பின் பவர் பட்டனில் ஹூவாய் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கியிருக்கிறது. இத்துடன் இந்த லேப்டாப்பில் அதிவேக வைபை வசதி, ஹூவாய் ஷேர் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கொண்டு ஹூவாய் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களிடையே புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் டாக்யூமென்ட்களை அதிவேகமாகவும், மிக எளிமையாகவும் பரிமாற்றம் செய்ய முடியும்.
ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ 2019 சிறப்பம்சங்கள்:
– 13.9 இன்ச் 3000×2000 பிக்சல் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் i5-8265U / i7-8565U பிராசஸர்
– 2 ஜி.பி. GDDR5 NVIDIA GeForce MX250 GPU
– இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 620
– 8 ஜி.பி. / 16 ஜி.பி. LPDDR3 2133MHz ரேம்
– 512 ஜி.பி. / 1000 ஜி.பி. NVMe PCIe எஸ்.எஸ்.டி.
– விண்டோஸ் 10 ஹோம்
– 1 எம்.பி. ஹெச்.டி. வெப்கேமரா
– பவர் பட்டனில் கைரேகை சென்சார்
– வைபை 802.11ac 2.4 GHz 300 Mbps, 5 GHz 1733 Mbps, 2 x 2 MIMO
– ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. 3.0 போர்ட், ஹெச்.டி.எம்.ஐ., 2 x யு.எஸ்.பி. டைப்-சி
– குவாட் டிஜிட்டல் மைக்ரோபோன்கள்
– குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்
– 57.4 Wh பேட்டரி
விலை
ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ 2019 லேப்டாப் மிஸ்டிக் சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 1599 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,28,820) என்றும் டாப் எண்ட் வேரியண்ட் விலை 1999 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,61,050) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.