டெல் நிறுவனம் தற்சமயம் அற்புதமான Dell XPS 13 லேப்டாப் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது இந்த லேப்டாப் எடை வெறும் 1.22 கிலோ எனத் கூறப்படுகிறது , மேலும் இதை பயன் படுத்த கம்பார்ட்டபிள் ஆக இருக்கும் மற்றும் இதை 4K அம்சங்களும் இருக்கிறது.
Dell XPS 13 லேப்டாப் பொறுத்தவரை சினிமா கலர், சினிமா சவுண்ட், சினிமா ஸ்ட்ரீம் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த லேப்டாப் மாடல் ரோஸ் கோல்ட் மற்றும் ஆல்பைன் வெள்ளை வண்ண வகைகளில் வருகிறது. மேலும் டெல் Dell XPS 13 லேப்டாப் ஏற்கனவே டெல் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் கிடைக்கிறது. பிரத்தியேக கடைகள், Croma,, ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் இருந்து பிப்ரவரி 20-ம் தேதி முதல் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அம்சங்களை பார்த்தல் டெல் XPS 13 சாதனம் பொதுவாக 13-இன்ச் முழு HD டிஸ்பிளே மற்றும் 1080×1920 பிக்சல் ரெஸலுசன் கொண்டுள்ளது, மற்றும் இந்த லேப்டாப் சாதனம் 8வது ஜெனரேஷன் குவாட் -கோர் I 5-8250 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதில் 8GB LPDDR3 ரேம் மற்றும் 256GB PCIe SSD ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் USB டைப்-C , 3.1(ஜென் 1), விண்டோஸ் ஹலோ மற்றும் IR கேமரா மூலம் பாஸ்வர்ட் இல்லாமல் என்ட்ரி அனுமதி இல்லை போன்ற பல அம்சங்கள் இந்த லேப்களில் இடம் பெற்றுள்ளது, இவ்வளவு அம்ஸங்களா நிறைந்த லேப்டாப்பின் விலை ரூபாய் 1,41,490 ஆக இருக்கிறது.