ASUS ZenBook லேப்டாப் , 4K OLED டச் ஸ்க்ரீன் டிஸ்பிளேயுடன் அறிமுகம்.

Updated on 18-Oct-2019

அசுஸ் நிறுவனம் சென்புக் ப்ரோ டுயோ, சென்புக் டுயோ, சென்புக் எடிஷன் 30 லேப்டாப் மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. முன்னதாக இவை தைபெயில் நடைபெற்ற கம்ப்யூடெக்ஸ் 2019 மற்றும் ஐ.எஃப்.ஏ. 2019 நிகழ்வுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய அசுஸ் லேப்டாப் மாடல்களுடன் விவோபுக் எஸ்14, விவோபுக் எஸ்15 மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் விவோபுக் எஸ்15 மாடல் ஸ்கிரீன்பேட் 2.0 உடன் வழங்கப்படுகிறது.

அசுஸ் சென்புக் ப்ரோ டுயோ சிறப்பம்சங்கள்:

– 15.6 இன்ச் 16:9 4K OLED தொடுதிரை டிஸ்ப்ளே
– 9th Gen இன்டெல் கோர் ஐ9-9980HK பிராசஸர்
– NVIDIA GeForce RTX 2060 GPU
– 32 ஜி.பி. DDR4 2666MHz ரேம்
– 1 டி.பி. PCIe Gen 3 x4 SSD
– பேக்லிட் கீபோர்டு
– 14 இன்ச் ஸ்கிரீன்பேட் பிளஸ் டச் டிஸ்ப்ளே
– இன்டெல் வைபை 6, ப்ளூடூத் 5.0
– தண்டர்போல்ட் 3 யு.எஸ்.பி. டைப்-சி மற்றும் டிஸ்ப்ளே போர்ட்
– 2 x யு.எஸ்.பி. 3.1 ஜென் 2 டைப்-ஏ, 1 x ஹெச்.டி.எம்.ஐ. 2.0
– ஐ.ஆர். ஹெச்.டி. கேமரா
– அசுஸ் சோனிக் மாஸ்டர் ஸ்டீரியோ ஆடியோ சிஸ்டம்
– கார்டனா மற்றும் அலெக்சா குரல் அங்கீகார வசதி
– 71Wh 8-செல் பேட்டரி
– விண்டோஸ் 10 ப்ரோ

அசுஸ் சென்புக் டுயோ சிறப்பம்சங்கள்: 

– 14 இன்ச் 16:9 FHD நானோ எட்ஜ் டிஸ்ப்ளே
– 10th Gen இன்டெல் கோர் ஐ7-10510U பிராசஸர்
– NVIDIA GeForce MX250 GPU
– அதிகபட்சம் 16 ஜி.பி. DDR3 2133MHz ரேம்
– அதிகபட்சம் 1 டி.பி. PCIe Gen 3 x4 SSD
– பேக்லிட் கீபோர்டு
– 12.6 இன்ச் ஸ்கிரீன்பேட் பிளஸ் டச் டிஸ்ப்ளே
– இன்டெல் வைபை 6, ப்ளூடூத் 5.0
– 1 x யு.எஸ்.பி. ஜென் 2 டைப்-சி, 1 x யு.எஸ்.பி. 3.1 ஜென் 2 டைப்-ஏ
– 1 x யு.எஸ்.பி. 3.1 ஜென் 1 டைப்-ஏ, 1 x ஹெச்.டி.எம்.ஐ.
– 1 x ஆடியோ காம்போ ஜாக், 1 x மைக்ரோ எஸ்.டி. கார்டு ரீடர்
– ஐ.ஆர். ஹெச்.டி. கேமரா
– அசுஸ் சோனிக் மாஸ்டர் ஸ்டீரியோ ஆடியோ சிஸ்டம்
– கார்டனா மற்றும் அலெக்சா குரல் அங்கீகார வசதி
– 70Wh 4-செல் பேட்டரி
– விண்டோஸ் 10 ஹோம்

அசுஸ் நிறுவனம் தனது சென்புக் மாடல்களை 10th Gen இன்டெல் கோர் பிராசஸர்களுடன் அப்டேட் செய்துள்ளது. அந்த வகையில் சென்புக் 13, சென்புக் 14 மற்றும் சென்புக் 15 மாடல்களில் புதிய பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்

– அசுஸ் சென்புக் டுயோ – ரூ. 89,990
– சென்புக் ப்ரோ டுயோ – ரூ. 2,09,990
– சென்புக் 13 – ரூ. 84,990
– சென்புக் 14 – ரூ. 84,990
– சென்புக் 15 – ரூ. 1,24,990
– விவோபுக் எஸ்431 – ரூ. 54,990
– விவோபுக் எஸ்532 – ரூ. 69,990

புதிய அசுஸ் லேப்டாப் மாடல்கள் அமேசான், ப்ளிப்கார்ட், பே.டி.எம். மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :