Asus போல்டபில் லேப்டாப் அடுத்த மாதம் அறிமுகம், அதற்க்கு முன்பே முன் பதிவு தொடங்கியது.

Asus போல்டபில் லேப்டாப் அடுத்த மாதம் அறிமுகம், அதற்க்கு முன்பே முன் பதிவு தொடங்கியது.
HIGHLIGHTS

Asus நிறுவனம் தனது முதல் போல்டப்பில் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது

Asus ZenBook 17 Fold OLED இந்தியாவில் நவம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்

தற்போது இந்த போல்டபில் லேப்டாப்பிற்கான இந்திய முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கி உள்ளது.

Asus நிறுவனம் தனது முதல் போல்டப்பில்  லேப்டாப்பை  இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. Asus ZenBook 17 Fold OLED இந்தியாவில் நவம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். தற்போது, ​​மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மட்டுமே சந்தையில் வருகின்றன, ஆனால் இந்த சங்கிலியை உடைத்து Asus ZenBook 17 Fold OLED ஐ அறிமுகப்படுத்த உள்ளது. Asus ZenBook 17 Fold OLED முதன்முதலில் இந்த ஆண்டு ஜனவரியில் கன்ஸ்யூமர் எலெக்ட்ரிக்  ஷோ (CES) 2022 இல் வழங்கப்பட்டது.

தற்போது இந்த போல்டபில் லேப்டாப்பிற்கான இந்திய முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கி உள்ளது. புதிய போல்டபில் லேப்டாப்-ஐ உருவாக்க பிஒஇ டெக்னாலஜி மற்றும் இண்டெல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியதாக அசுஸ் தெரிவித்து இருக்கிறது. இதில் 17 இன்ச் 2.5K ஸ்கிரீன் உள்ளது. இதனை மடிக்கும் போது 12.5 இன்ச் லேப்டாப் போன்று பயன்படுத்த முடியும்.

அசுஸ் எர்கோசென்ஸ் ப்ளூடுத் கீபோர்டு, டச்பேட் உள்ளிட்டவைகள் அடங்கிய போல்டிங் டிசைன் இருப்பதால், இந்த சாதனத்தை கணினி, லேப்டாப், டேப்லெட், ஆன்-ஸ்கிரீன் கீபோர்டு, புக் மற்றும் எக்ஸ்டெண்ட் என ஏராளமோன மோட்களில் பயன்படுத்த முடியும். இந்த லேப்டாப் உலகின் முதல் 17.3 இன்ச் மடிக்கக்கூடிய OLED இண்டெல் இவோ சான்று பெற்ற சாதனம் ஆகும்.

புதிய ஜென்புக் 17 போல்டு மாடலில் இரண்டு யுஎஸ்பி சி தண்டர்போல்ட் 4 போர்ட்கள், பெரிய 75Wh பேட்டரி, 12th Gen இண்டெல் கோர் i7 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் XE GPU மற்றும் இண்டெல் வைபை 6E போன்ற அம்சங்கள் உள்ளன.

முன்புதிவு விவரங்கள்: 

புதிய அசுஸ் ஜென்புக் 17 போல்டு OLED மாடலை முன்பதிவு செய்வோர், இதனை ரூ. 2 லட்சத்து 84 ஆயிரத்து 290 என்ற விலையில் வாங்கிட முடியும். இத்துடன் ரூ. 5 ஆயிரம் வரை கேஷ்பேக் மற்றும் ரூ. 40 ஆயிரத்து 700 வரை எக்சேன்ஜ் மதிப்பு வழங்கப்படுகிறது. இத்துடன் முன்பதிவு செய்வோருக்கு ரூ. 19 ஆயிரத்து 500 மதிப்புள்ள 500 ஜிபி SSD மற்றும் ரூ. 7 ஆயிரத்து 600 மதிப்புள்ள வாரண்டி எக்ஸ்டென்ஷன் வழங்கப்படுகிறது.

முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், இதன் விற்பனை நவம்பர் 10 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 29 ஆயிரத்து 990 ஆகும். விற்பனை அசுஸ் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo