அசுஸ் நிறுவனத்தின் Asus ExpertBook லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.

அசுஸ்  நிறுவனத்தின் Asus ExpertBook லேப்டாப்  இந்தியாவில் அறிமுகம்.
HIGHLIGHTS

அசுஸ் இந்தியா நிறுவனம் ஆறு புதிய லேப்டாப் மாடல்களை பிரீமியம் எக்ஸ்பர்ட்புக் சீரிசில் அறிமுகம் செய்து இருக்கிறது

புதிய லேப்டாப்கள் B5, B7, B2, B3 மற்றும் 12th Gen B9 மற்றும் B1 என அழைக்கப்படுகின்றன

இந்த லேப்டாப்கள் நீடித்த ப்ரோடக்டிவிட்டி மற்றும் பயனர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கின்றன

அசுஸ் இந்தியா நிறுவனம் ஆறு புதிய லேப்டாப் மாடல்களை பிரீமியம் எக்ஸ்பர்ட்புக் சீரிசில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லேப்டாப்கள் B5, B7, B2, B3 மற்றும் 12th Gen B9 மற்றும் B1 என அழைக்கப்படுகின்றன. ஹைப்ரிட் வொர்க் முறையை கருத்தில் கொண்டு வொர்க்ஸ்டேஷன் மற்றும் கன்வெர்டிபில் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புது லேப்டாப்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த லேப்டாப்கள் நீடித்த ப்ரோடக்டிவிட்டி மற்றும் பயனர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கின்றன. இவற்றில் பில்ட்-இன் கைரேகை சென்சார், face recognition வசதிக்காக IR கேமரா, வெப்கேமரா, டேட்டா செக்யுரிட்டிக்காக டிரஸ்டட் பிளாட்ஃபார்ம் மாட்யுல் (TPM) 2.0 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.

எக்ஸ்பர்ட்புக் B7 ஃப்ளிப் மாடலில் 5ஜி கனெக்டிவிட்டி உள்ளது. இத்துடன் அதிநவீன 12th Gen இண்டெல் கோர் i7 28-வாட் P சீரிஸ் பிராசஸர், வைபை 6, ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 14 இன்ச் QHD+ 2560×1600 பிக்சல் ஆண்டி கிலேர் டச் ஸ்கிரீன், அசுஸ் பென், 360-டிகிரி ஹின்ஜ் உள்ளது.

எக்ஸ்பர்ட்புக் B5 சீரிஸ் மாடல்களில் இண்டெல் 12th Gen CoreTM i7-P சீரிஸ் 28W பிராசஸர், தண்டர்போல்ட் 4, ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ், அதிகபட்சம் 40 ஜிபி குயிக் DDR ரேம், வைபை 6 சப்போர்ட் உள்ளிட்டவை எக்ஸ்பர்ட் B5 மற்றும் B5 ஃப்ளிப் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. எக்ஸ்பர்ட்புக் B5 மற்றும் B5 ஃப்ளிப் மாடல்களில் 14 இன்ச் FHD+ ஸ்கரீன், ஆண்டி-கிலேர் கோட்டிங் உள்ளது. B5 ஃப்ளிப் மாடலில் டச் சப்போர்ட் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்டெப்லெஸ் கன்வெர்டிபில் ஹின்ஜ் உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo