ஆப்பிள் ஐமேக் ப்ரோ இந்தியாவில் வெளியானது

ஆப்பிள் ஐமேக் ப்ரோ இந்தியாவில் வெளியானது
HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு கம்ப்யூட்டரான ஐமேக் ப்ரோ இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு மற்றும் சக்திவாய்ந்த கம்ப்யூட்டரான ஐமேக் ப்ரோ இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 2017-இல் ஐமேக் ப்ரோ விலை இந்தியாவில் ரூபாய்.4,15,000 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இன்டெல் சியோன் W பிராசஸர் சார்ந்து – 8 கோர், 10 கோர், மற்றும் 18 கோர் என மூன்று வித மாடல்களில் கிடைக்கிறது. எனினும் இந்தியாவில் 8-கோர் பிராசஸர் கொண்ட மாடல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஐமேக் ப்ரோ இந்தியாவில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. 

சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஐமேக் ப்ரோ மாடலில் 27 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே, 5K (5120×2280) ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இத்துடன் 3.2 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட இன்டெல் சியோன் W 8-கோர் பிராசஸர் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஜிபி ரேடியான் ப்ரோ வீகா 56ல கிராஃபிக் பிராசசிங் யுனிட் (GPU) கொண்டிருக்கிறது. புதிய ஐமேக் ப்ரோவில் 2666 மெகாஹெர்ட்ஸ் 32 ஜிபி ரேம், 1000 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. 

ரேம் மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்த வரை புதிய ஐமேக் ப்ரோவில் 1080 பிக்சல் ஃபேஸ்டைம் ஹெச்.டி. கேமரா, நான்கு யுஎஸ்பி-3 போர்ட், நான்கு தண்டர்போல்ட் 3 போர்ட், எஸ்.டி.X கார்டு ஸ்லாட், ஈத்தர்நெட் போர்ட், 3.5mm. ஹெட்போன் ஜாக், ப்ளூடூத் 4.1 உள்ளிட்டவை வழங்கப்ட்டுள்ளது.

டெவலப்பர் வொர்க்ஃப்ளோ, உயர்-ரக புகைப்படங்களை எடிட் செய்யும் வசதி, ரியல்-டைம் 4K மற்றும் 8K வீடியோக்களை எடிட் செய்யும் வசதியை வழங்குகிறது. புதிய தலைமுறை கம்ப்யூட்டிங் கோர், 16 ஜிபி பேண்ட்வித் மெமரி, வீகா CPU கொண்டிருக்கிறது. இந்த சி.பி.யு. 3டி ரென்டரிங் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி பிரேம்-ரேட் 11 டெராஃபிளாப் கம்ப்யூட்டிங் திறன் வழங்குகிறது. 

அதிநவீன ஹார்டுவேர் அம்சங்களுடன் புதிய ஐமேக் ப்ரோ தோற்றமும் அனைவரும் விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் கிரே ஃபினிஸ் மற்றும் மேஜிக் கீபோர்டு, மேஜிக் மவுஸ் ஆப்ஷனல் மேஜிக் டிராக்பேட் உள்ளட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டரில் 27.0 இன்ச் ரெட்டினா 5K டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ், P3 வைடு கலர் கமுட் மற்றும் 100 கோடி நிறங்களை சப்போர்ட் செய்கிறது. 

நான்கு மைக்ரோபோன் மற்றும் பீம்ஃபோமிங் தொழில்நுட்பம் கொண்டுள்ள புதிய ஐமேக் ப்ரோ, 1080 பிக்சல் பேஸ் டைம் ஹெச்.டி. கேமரா, மேம்படுத்தப்பட்ட லோ-லைட் செயல்திறன் மற்றும் ஸ்பீக்கர்கள் 50 சதவிகிதம் வரை அதிக ஒலியை வழங்குகிறது. இத்துடன் புதிய தெர்மல் ஆர்கிடெக்ச்சர், 80 சதவிகிதம் வரை அதிக குளிர்ச்சியை வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo