மேக்புக் ஏர் என்ட்ரி-லெவல் விரைவில் வெளியாகும்
போன 2015-ம் ஆண்டு முதல் ரூ.55,000-விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மேக்புக் ஏர் சாதனம், அனைத்து நாடுகளிலும் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது
ஆப்பிள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய ஏர் நோட்புக் மாடல்களை அறிமுகம் செய்யதது அந்நிறுவனம். இப்போது வெளிவந்த அறிவிப்பில் ஆப்பிள் நிறுவனம் 13.3-இன்ச் அளவு கொண்ட என்ட்ரி-லெவல் மேக்புக் டிவைஸ் அறிமுகம் செய்து தற்போதைய மேக்புக் ஏர் சாதனத்திற்கு மாற்றாக விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
தற்சமயம் மேக்புக் ஏர் மாடல்களில் பிராசஸர் வேகம் பொறுத்தவரை 1.6ஜிகாஹெர்ட்ஸ்-ல் இருந்து 1.8ஜிகாஹெர்ட்ஸ் -ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த மேக்புக் ஏர் டிவைஸ்.
மேக்புக் ஏர் பொறுத்தவரை சிக்னேச்சர் ஸ்டைல் வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இவற்றுள் ரெட்டினா டிஸ்பிளே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மேக்புக் ஏர் பொறுத்தவரை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெறும் என ஆப்பிள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, என்ட்ரி-லெவல் 13-இன்ச் மேக்புக் ஏர் மாடல் பொறுத்தவரை இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்யப்படும் என ஆப்பிள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர் மாடல்களில் எல்சிடி டிஸ்பினே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு ஜெனரல் இன்டர்ஃபேஸ் சொல்யூஷன் விநியோகம் செய்யமுடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போன 2015-ம் ஆண்டு முதல் ரூ.55,000-விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மேக்புக் ஏர் சாதனம், அனைத்து நாடுகளிலும் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர் மாடல்களில் பொதுவாக ஃபுல் ஸ்கிரீன் வசதி மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் இடம்பெறும் என ஆப்பிள் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile