12.9 இன்ச் கொண்ட LED புதிய ஐபேட் ப்ரோ மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமுகம்.
புதிய மேக்புக் மாடல் 5ஜி வசதி கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 12.9 இன்ச் அளவில் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் பல்வேறு நோட்புக் மாடல்களை மினி எல்.இ.டி. பேக்லிட் டிஸ்ப்ளேவுடன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் 3டி சென்சிங் வசதி கொண்ட புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை இந்த ஆண்டின் முதல் அரையாண்டு கால்கட்டத்தில் அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது. புதிய ஆப்பிள் சாதனங்களில் 3டி சென்சிங் வசதி பின்புற கேமரா மூலம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
மேலும் சில எல்.சி.டி. மாணிட்டர்களில் ஆப்பிள் நிறுவனம் மினி எல்.இ.டி பேக்லிட் டிஸ்ப்ளே வழங்கும் என கூறப்படுகிறது. எனினும், இவை ஐமேக் / ஐமேக் ப்ரோ அல்லது ஸ்டான்ட் அலோன் டிஸ்ப்ளே என எந்த சாதனத்தில் வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.
முன்னதாக ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மினி எல்.இ.டி. டிஸ்ப்ளேவுடன் ஆறு சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார். இவை 2021 ஆண்டு இறுதியில் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ, 10.2 இன்ச் ஐபேட், 7.9 இன்ச் ஐபேட் மினி, 27 இன்ச் ஐமேக் ப்ரோ, 14 இன்ச் மேக்புக் ப்ரோ, 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் என அவர் தெரிவித்து இருந்தார்.
புதிய மேக்புக் மாடல் 5ஜி வசதி கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய மேக்புக் மாடலில் ஆப்பிள் நிறுவனம் செராமிக் மூலம் உருவாக்கப்பட்ட 5ஜி ஆன்டெனா போர்டினை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.இதுதவிர ஆப்பிள் நிறுவனம் டைம் ஆஃப் ஃபிளைட் சிஸ்டம் பயன்படுத்தி 3டி மேப்பினை உகுவாக்கும் என கூறப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile