தமிழ்நாட்டு மக்களுக்காக பொங்கல் பண்டிகை முன்னிட்டு YAMAHA சூப்பர் சலுகை அறிவிப்பு.

தமிழ்நாட்டு மக்களுக்காக பொங்கல் பண்டிகை முன்னிட்டு YAMAHA  சூப்பர் சலுகை அறிவிப்பு.
HIGHLIGHTS

வரும் 14ம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்கி, 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது

Yamaha பிரத்யேக சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்திற்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

நிறுவனம் அறிவித்துள்ல புதிய சலுகைகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்

வரும் 14ம் தேதி போகி பண்டிகையுடன்  தொடங்கி, 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் நேரடி வியாபரிகள் மட்டுமின்றி, ஆன்லைன் வணிக தளங்களும் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்து வழங்குவது வழக்கம். மற்ற நாட்களை காட்டிலும் விழாக்காலங்களில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதால், பயனாளர்களும் ஆர்வமுடன் பொருட்களை வாங்குவது வழக்கம். அந்த வரிசையில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணியில் உள்ள, இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமும் பொங்கல் பண்டிகையையொட்டி, பிரத்யேக சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்திற்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பின்படி, யமஹா நிறுவனம் அறிவித்துள்ல புதிய சலுகைகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தற்போது பொங்கல் பண்டிகை சிறப்பு சலுகைகள் யமஹா ஃபசினோ 125சிசி ஹைப்ரிட் மாடலின் டிரம் வேரியண்ட் மோட்டார் சைக்கிளுக்கும், FZ மாடலுக்கும் மட்டும் பொருந்தும்.

சலுகை விவரங்கள்: 

யமஹா FZ மாடலை வாங்குவோருக்கு ரூ. 7 ஆயிரம் வரை கேஷ்பேக், ரூ. 7 ஆயிரத்து 999 முன்பணம், மாதம் ரூ. 1999 எனும் குறைந்த மாத தவணை முறை மற்றும் 0 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

யமஹா ஃபசினோ 125 Fi ஹைப்ரிட் டிரம் மாடலை வாங்கும் போது ரூ. 1500 வரை கேஷ்பேக், ரூ. 3 ஆயிரத்து 999 எனும் மிக குறைந்த முன்பணம், மாதம் ரூ. 1999 எனும் மாத தவணை, 0 சதவீத வட்டி போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் தமிழ் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சலுகைகள் யமஹா விற்பனை மையங்களில் பெற முடியும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை யமஹா விற்பனை மையங்களில் அறிந்து கொள்ள முடியும்.

150சிசி யமஹா FZ சீரிசில் சக்திவாய்ந்த ஏர் கூல்டு 4 ஸ்டிரோக் 149சிசி, SOHC, 2 வால்வுகள் கொண்ட சிங்கில் சிலிண்டர் ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.4 பிஎஸ் பவர், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

யமஹா ஃபசினோ ஹைப்ரிட் மாடலில் ஏர் கூல்டு, 4 ஸ்டிரோக் SOHC, இரண்டு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.2 பிஎஸ் பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதுதவிர ஏராளமான பயனுள்ள அம்சங்கள் இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

சலுகைகள் யமஹா விற்பனை மையங்களில் பெற முடியும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை யமஹா விற்பனை மையங்களில் அறிந்து கொள்ள முடியும். யமஹா ஃபசினோ ஹைப்ரிட் மாடலில் ஏர் கூல்டு, 4 ஸ்டிரோக் SOHC, இரண்டு வால்வுகள் கொண்ட இன்ஜின் இடம்பெற்று உள்ளது. இந்த என்ஜின் 8.2 பிஎஸ் பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதுதவிர ஏராளமான பயனுள்ள அம்சங்கள் இந்த மாடலில் வழங்கப்பட்டு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo