150 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்து அசத்தும் Xiaomi…!
இரண்டாவது காலாண்டில் சியோமியின் நிகர லாபம் 1463 கோடி யுவான், இதில் 2018 முதல் காலாண்டு இழப்பு 703 கோடி ஆகும். வருடாந்திர அடிப்படையில் லாபம் 25.1% வளர்ச்சியடைந்துள்ளது.
சியோமி நிறுவனம் 2018 இரண்டாவது காலாண்டிற்கான வருவாய் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜூன் 30, 2018 வரை நிறைவுற்ற காலாண்டில் சியோமி வருவாய் 4524 கோடி யுவான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 68.3% அதிகம் ஆகும்.
இதேபோன்று சர்வதேச வருவாய் 151.7% வளர்ச்சியடைந்து 164 கோடி யுவான்களாக இருக்கிறது. இது அந்நிறுவன மொத்த வருவாயில் 36.3% ஆகும். வியாபாரத்தின் அனைத்து பிரிவுகளிலும் கணிசமான வளர்ச்சியடைந்திருக்கும் நிலையில், ஐஓடி (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்) மற்றும் வாழ்வியல் பிரிவு சாதனங்களில் இது வேகமான வளர்ச்சி என சியோமி தெரிவித்துள்ளது.
இரண்டாவது காலாண்டில் சியோமியின் நிகர லாபம் 1463 கோடி யுவான், இதில் 2018 முதல் காலாண்டு இழப்பு 703 கோடி ஆகும். வருடாந்திர அடிப்படையில் லாபம் 25.1% வளர்ச்சியடைந்துள்ளது.
ஸ்மார்ட்போன் விற்பனை வருடாந்திர அடிப்படையில் 58.7% வளர்ச்சியடைந்து 305 கோடி யுவான் வருவாய் பெற்றிருக்கிறது. ஸ்மார்ட்போன் விற்பனை மற்றும் சராசரி விற்பனை விலை போன்றவை ஸ்மார்ட்போன் வளர்ச்சிக்கு காரணமாய் அமைந்துள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சியோமி நிறுவனம் 43.9% அதிக யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile