வெப்பமான கோடையில், Xiaomi தனது புதிய AC யை அறிமுகப்படுத்தியது.

வெப்பமான கோடையில், Xiaomi தனது புதிய AC யை அறிமுகப்படுத்தியது.
HIGHLIGHTS

வெயில் காலத்தில் குளிர்ச்சி கிடைக்கும்

Xiaomi புதிய ACயை அறிமுகப்படுத்தியது

சீன மார்க்கெட்யில் அறிமுகப்படுத்தப்பட்டது

Xiaomi MIJIA ஏர் கண்டிஷனர் 2HP சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. MIJIA ஏர் கண்டிஷனரின் சூப்பர் பவர்-சேமிங் 2HP மாடலை அறிமுகப்படுத்துகிறது. ஒரு வருடத்தில் சுமார் 380 கிலோவாட் மணிநேர எலக்ட்ரிக் சேவிங் செய்ய முடியும் என்று கம்பெனி கூறுகிறது. இந்த ஏர் கண்டிஷனரின் விலை 3,199 யுவான் ($453). இருப்பினும், இது 2,899 யுவான்களுக்கு ($412) கிடைக்கப்பெற்றது. இந்திய விலையின்படி ரூ.34,269.

MIJIA ஏர் கண்டிஷனர் 2HP யின் பியூச்சர்கள்:
இந்த ஏர் கண்டிஷனர் 5000W என்ற மதிப்பிடப்பட்ட குளிரூட்டும் திறன் மற்றும் 6700W வெப்பமூட்டும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 20 முதல் 30 சதுர மீட்டர் இடத்தை குளிர்விக்க முடியும். அதிக வெப்பநிலையிலும் இது பெரிதும் உதவுகிறது. MIJIA AC யில் செல்ப் டேவலப்படு ஏர் டக்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது அதிக திறன் கொண்ட விரிவாக்க வால்வைக் கொண்டுள்ளது. அதன் இன்டெர்னல் யூனிட் சுய சுத்தம் செய்யும் திறனுடன் வருகிறது. பாக்டீரியாவை அதன் துப்புரவு செயல்முறை மற்றும் அதிக வெப்பநிலை உலர்த்தும் டெக்னாலஜி மூலம் அகற்றலாம்.

இது ஏசி ஹுமிடிட்டியும் கட்டுப்படுத்துகிறது. சத்தம் கூட வராது. இதனால் இரவில் சத்தமில்லாமல் நிம்மதியாக தூங்கலாம். அதன் சக்தி வாய்ந்த பயன்முறையில் இருந்தாலும் குறைந்த சத்தம் எழுப்புகிறது.

ரிமோட் மூலம் கன்ட்ரோல் செய்யலாம். Xiao AI வாய்ஸ் கமெண்ட்களுடன் Mijia ஆப்பின் மூலம் நீங்கள் அதைக் கட்டுப்படுத்தலாம். இந்த AC உங்களுக்கு ஆப்ஸ் கிளீனிங் ரீமைண்டர்களையும் வழங்கும். இது இயக்க முறை மற்றும் வெப்பநிலையைக் காட்டும் LED ஸ்கிரீனையும் கொண்டுள்ளது. இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

S Raja
Digit.in
Logo
Digit.in
Logo