சியோமி நிறுவனத்தின் Mi பாப் நிகழ்வில் Mi மியூசிக் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய Mi மியூசிக் ஆப் ஹங்காமா மியூசிக் இன்டகிரேஷன் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதே செயலி கடந்த மாதம் பீட்டா வடிவில் சில சியோமி வாடிக்கயாளர்களுக்கு வழங்கப்பட்டது.
புதிய ஒப்பந்தத்தின் மூலம் சுமார் பத்து லட்சத்துக்கும் அதிகமான மியூசிக் டிராக்களை இலவசமாக பயன்படுத்த முடியும். 13 இந்திய மொழிகள் மற்றும் சர்வதேச மொழிகளில் பாடல்களை கேட்க முடியும். Mi மியூசிக் செயலியில் பாடல்களை ஆஃப்லைனில் டவுன்லோடு செய்ய விரும்புவோர் ஹங்காமா ப்ரோ பேக்கேஜ் வாங்க வேண்டியிருக்கும்.
இந்த சேவையை பெற வாடிக்கையாளர்கள் ஆண்டு சந்தாவாக ரூ.499 செலுத்த வேண்டும், எனினும் இந்த சலுகை முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஹங்காமா ப்ரோ பேக்கேஜ் ஆண்டு சந்தா உண்மை விலை ரூ.899 ஆகும். இதுவரை மட்டும் Mi மியூசிக் செயலியை தினமும் சுமார் 70 லட்சம் பேர் பயன்படுத்தி வருவதாக சியோமி அறிவித்துள்ளது.
Mi மியூசிக் செயலியில் கரோக்கி ப்ரியர்களுக்கு டைனமிக் லிரிக்கள் வழங்கப்படுவதால், பாடல்களை கேட்கும் போது ஒரே கிளிக் மூலம் பாடலின் விரும்பிய இடத்திற்கு செல்ல முடியும். இதேபோன்று மியூசிக் வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட தேர்வுகள், தீம் மற்றும் மேலும் அதிகப்படியான பாடல்களை Mi மியூசிக் செயலியில் சேர்க்க சியோமி திட்டமிட்டுள்ளது.
Mi வீடியோ செயலியில் வீடியோ கன்டென்ட் இன்டகிரேஷன் மற்றும் சக்திவாயந்த லோக்கல் வீடியோ பிளேயர் வழங்கப்படுகிறது. இந்த செயலியின் பீட்டா டீசர் மார்ச் மாத வாக்கில் வெளியிடப்பட்டது. Mi வீடியோ தரவுகள் ஹங்காமா பிளே, சோனிலிவ் மற்றும் வூட் போன்ற சேவைகளின் மூலம் இயக்கப்படுகிறது.
இதைத் தொட்ந்து சன் நெக்ஸ்ட், ஆல்ட் பாலாஜி, சீ5, வியூ, டிவிஎஃப் மற்றும் ஃப்ளிக்ஸ்ட்ரீ உள்ளிட்ட சேவைகள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக சியோமி அறிவித்துள்ளது. தற்சமயம் வரை Mi வீடியோ செயலியில் சுமார் 500,000 மணி நேரத்திற்கான தரவுகள் கிடைக்கின்றன. இவற்றில் அதிகபட்சம் 80% தரவுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
Mi வீடியோ செயலியில் தற்சமயம் வரை 12-க்கும் அதிகமான வீடியோ ஃபார்மேட்கள் AVI, MP4, MOV, MKV, and MKA, MPEG, M2TS சப்போர்ட் செய்கிறது. இத்துடன் பல்வேறு மொழிகளில் சப்-டைட்டில்கள், பிரைவேட் ஃபோல்டர்கள், பல்வேறு ஆடியோ டிராக்கள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
இத்துடன் DLNA மற்றும் மிராகேஸ்ட் சப்போர்ட் கொண்டு எவ்வித ஸ்மார்ட் டிவிக்களிலும் ஒரே கிளிக்-இல் Mi வீடியோ ஆப் இணைந்து கொள்ளும். இந்த செயலியை வாடிக்கையாளர்கள் 15 இந்திய மொழிகளில் பயன்படுத்த முடியும். எதிர்காலத்தில் பல்வேறு கூடுதல் தரவுகள், ஃப்ளோட்டிங் பிளேயர், புதிய மொழிகள், ஜெனர் ஃபில்ட்டர், பிளேபேக் ஸ்பீட் உள்ளிட்ட வசதிகளை Mi வீடியோ செயலியில் சேர்க்க சியோமி திட்டமிட்டுள்ளது.