சென்னையைச் சேர்ந்த ஆப் டெவலப்பர் ஆப்பிள் டிசைன் விருதை வென்றுள்ளது
2018 ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் ஐஓஎஸ் 12 இயங்குதளத்துடன் வாட்ச் ஓஎஸ் 5, டிவி ஓஎஸ் 5 மற்றும் மேக் ஓஎஸ் மோஜேவ் உள்ளிட்ட இயங்குதளங்களும் அறிவிக்கப்பட்டன.
சென்னையைச் சேர்ந்த ஆப் டெவலப்பர் ஸ்டார்ட்-அப் நிறுவனமான வேப்பிள்ஸ்டஃப், 2018க்கான ஆப்பிள் டிசைன் விருதை வென்றுள்ளது. கால்ஸி (Calzy) என்ற கால்குலேட்டர் செயலிக்காக வேப்பிள்ஸ்டஃபுக்கு இவ்விருது அளிக்கப்படுகிறது. ரூ.159 விலையில் கிடைக்கும் இந்த கால்ஸி செயலிக்கு ப்ளே ஸ்டோரில் 5க்கு 4.7 புள்ளிகள் கிடைத்துள்ளன. மொத்தம் 10 செயலிகளுக்கு டிசைன் விருதை அறிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.
கேல்ஸி (Calzy) என்ற கால்குலேட்டர் செயலிக்காக வேப்பிள்ஸ்டஃப் இந்த விருதை வென்றுள்ளது. மேக், ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் இந்த செயலி கிடைக்கிறது. 2018 ஆப்பிள் டிசைன் விருது மொத்தம் 10 செயலிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.159 விலையில் கிடைக்கும் கால்ஸி ஆப் ஐஓஎஸ் 10.0 மற்றும் அதற்கும் புதிய இயங்குதளங்களில் கிடைக்கிறது. பிளே ஸ்டோரில் 5 புள்ளிகளுக்கு 4.7 புள்ளிகளை பெற்றிருக்கிறது. கால்ஸி செயலியில் வரும் மெமரி ஏரியா அம்சம், அதிகப்படியான எண்களை சேமித்து வைத்து, பல்வேறு கால்குலேட்டிங் செஷன்களில் பயன்படுத்த முடியும்.
ஆப்பிள் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதியை டெவலப்பர்களுக்கு அறிவித்தது. புதிய ஏஆர் கிட் 2 மல்டிமீடியா இன்டராக்ஷன்களை தனித்துவம் மிக்கதாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் மெஷர் எனும் புதிய செயலி கேமராவில் பொருட்களின் அளவுகளை கண்டறிய வழி செய்கிறது.
இத்துடன் அடோப் கிரியேட்டிவ் கிளவுட் மற்றும் ஐஓஎஸ் தளங்களில் டெவலப்பர்களுக்கு ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி எடிட்டிங்-இல் சிறப்பான அனுபவத்தை பெற முடியும். இந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வில் ஹார்டுவேர் சார்ந்த எவ்வித அறிவிப்புகள் இன்றி முழுமையான மென்பொருள் விழாவாக அமைந்தது.
2018 ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் ஐஓஎஸ் 12 இயங்குதளத்துடன் வாட்ச் ஓஎஸ் 5, டிவி ஓஎஸ் 5 மற்றும் மேக் ஓஎஸ் மோஜேவ் உள்ளிட்ட இயங்குதளங்களும் அறிவிக்கப்பட்டன. இத்துடன் சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட் அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1000 கோடி ரிக்வஸ்ட்களை சிரி பெறுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile