ஐஓஎஸ் 12, வாட்ச் ஓஎஸ் மற்றும் டிவி ஓஎஸ் இயங்குதளங்களை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் மேக் ஓஎஸ் 10.4 இயங்குதளத்தை ஆப்பிள் 2018 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய மேக் ஓஎஸ் இயங்குதளம் மோஜேவ் என அழைக்கப்படும் நிலையில், பல்வேறு புதிய வசதிகளை இந்த இயங்குதளம் கொண்டிருக்கிறது. அதிகளவு ஹூட் மாற்றங்களை டெஸ்க்டாப் சாதனங்களுக்கு கொண்டு வந்திருக்கும் புதிய மேக் ஓஎஸ் இயங்குதளத்தை ஆப்பிள் தலைமை செயல் அகிகாரி குவியல் முழுவதும் புதிய அம்சங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
புதிய மேக் ஓஎஸ் சிஸ்டம்-வைடு டார்க் மோட் கொண்டிருக்கிறது. இந்த அம்சம் யூசர் இன்டர்ஃபேஸ் மட்டுமின்றி வால்பேப்பர் மற்றும் வின்டோஸ்-இல் இருக்கும் அனைத்து தரவுகளையும் இருள் சூழ்ந்ததாக மாற்றியமைக்கும். மேக் ஓஎஸ் மோஜேவ் டார்க் மோட் ஆப்ஷனை எக்ஸ்கோடிற்கும் கொண்டு வருகிறது. எக்ஸ்கோடு டெவலப்பர்களால் அதிகம் விரும்பக்கூடிய ஒன்றாகும்.
ஆப்பிள் நிறுவனம் ஸ்டேக்ஸ் வசதியை டெஸ்க்டாப் தளங்களுக்கு கொண்டு வருகிறது. இந்த அம்சம் அனைத்து ஃபைல்களையும் ஒழுங்கான ஃபோல்டரில் ஒருங்கிணைத்து வைக்கும். மேக் கணினிகளில் ஃபோல்டர்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஃபைல் ஒன்றை ஸ்டேக் ஃபோல்டரில் சேர்க்க அதனை டிராக் செய்து டெஸ்க்டாப்-இல் வைத்தால் வேலை முடிந்தது.
இத்துடன் ஸ்கிரீன்ஷாட்களை எடுப்பதை புதிய இயங்குதளத்தில் மிகவும் எளிமையாக ஆப்பிள் மாற்றியிருக்கிறது. மேக் ஓஎஸ் மோஜேவ் தளத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க டெஸ்க்டாப் கீழ் வலது புற ஓரமாக காணப்படும் ஐகானை க்ளிக் செய்தால் மார்க அப் ஆப்ஷன் தெரியும்.
ஸ்கிரீன்ஷாட் மட்டுமின்றி க்விக்டைம் செயலியில் ஸ்கிரீன் ரெக்கார்டு செய்வதை ஆப்பிள் நிறுவனம் மேலும் எளிமையாக மாற்றியிருக்கிறது. இதே அப்டேட் கன்டினியூட்டி கேமரா வடிவில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. கன்டினியூட்டி கேமரா மூலம் பகைப்படங்களை எடுத்ததும், அவற்றை உடனடியாக மேக் கம்ப்யூட்டரில் தெரியும். இந்த அம்சம் புகைபப்டங்களை போன் கேமராவில் எடுக்கப்பட்டதும் நேரடியாக மேக் கணினிகளில் பார்க்கும் வசதியை வழங்குகிறது.
இத்துடன் நியூஸ் மற்றும் ஸ்டாக் செயலிகளும் புதிய இயங்குதளத்தில் வழங்கப்படுகிறது. மேலும் வாய்ஸ் மெமோஸ் வசதியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய இயங்குதளத்தில் முற்றியும் புதிய ஃபைல் சிஸ்டம் மற்றும் விண்டோயிங் சர்வீஸ் வழங்கும் ஆப்ஷன் கொண்டிருக்கிறது. உங்களது அனுமதியின்றி உங்களின் தகவல்களை செயலிகள் இயக்குவதை தடுக்கும் பாதுகாப்பு அம்சம் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் இணைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வில் மாற்றியமைக்கப்பட்ட மேக் ஆப் ஸ்டோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மேக் ஆப் ஸ்டோரின் இடதுபுறத்தில் சைடுபார் மற்றும் எடிட்டோரியலுக்கு பெரிய பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் டிஸ்கவர், கிரியேட், வொர்க், பிளே, டெவலப், கேட்டகரீஸ், அப்டேட்ஸ் என பெயரிடப்பட்டுள்ளன.
ஃபேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில் 32 பேருடன் க்ரூப் கால்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில் ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும்.
இதே நிகழ்வில் மெட்டல் API மூலம் மேம்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயில கிரியேட் ML எனும் டூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கிராஸ்-பிளாட்ஃபார்ம் ஃபிரேம்வொர்க் தளத்தில் ஆப்பிள் மேற்கொண்டு இருக்கும் புதிய மாற்றம் காரணமாக டெவலப்பர்கள் தங்களது செயலிகளை ஐஓஎஸ் மற்றும் மேக் ஓஎஸ் தளங்களில் வழங்க முடியும்.