நீங்கள் ஒரு மாணவராக இருந்தால் உங்களுக்கு லேப்டாப் வழங்குகிறோம் என்று மெசேஜ் வைரலாக பரவி வருகிறது, இது உண்மை தான் என பலரும் நம்பி வருகிறார்கள், ஆனால் இது உண்மையல்ல மேலும் இது WhatsApp யின் புதிய ஸ்கேம் மெசேஜ் ஆகும். இந்த மெசெஜின் உங்களுக்கு லேப்டாப் இலவசமாக பெற வேண்டும் என நினைத்தால் இங்கு இந்த லிங்கில் க்ளிக் செய்து உங்கள் தகவலை நிரப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது, ஆனால் PIB மூலம் இது ஒரு போலி மெசேஜ் இதை யாரும் நம்ப வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
நாம் PIB Fact Check படி பார்த்தல் இது தவறான மெசேஜ் WhatsApp யில் பரவி வருவதாக கூறப்பட்டுள்ளது, அதாவது இந்த மெசேஜில் க்ளிக் செய்து தங்களின் தனிப்பட்ட தகவல்களை நிரப்ப கூறுகிறது, மேலும் அந்த லிங்கில் ஒரு போரம் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது இதன் நோக்கம் டேட்டாவை கலெக்ட் செய்து தவறாக பயன்படுத்துவதே இதன் நோக்கம்.
“The Applications for the Students Laptop Scheme 2024 is Available. This scheme is open to all students who, for financial reasons, are unable to purchase a laptop and are in need of one for their education. In 2024, over 960,000 students will be given free laptops to enhance their learning. Applications have begun, and students who have applied have already started receiving their laptops. Register and apply here: https://lc.ke/Students-FREE-LAPTOP”
சந்தேகத்திற்கிடமான எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் PIB பயனர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது தவிர, உங்கள் தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்
இதையும் படிங்க: New Year Holiday Scam: இந்த 3 மோசடியிலிருந்து எச்சரிக்கையாக இருங்க மக்களே எச்சரிக்கும் Google