WhatsAppக்கு போட்டியாக வந்துள்ளது GB WhatsApp, இது உங்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா?

WhatsAppக்கு போட்டியாக வந்துள்ளது GB WhatsApp, இது உங்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா?
HIGHLIGHTS

GB WhatsApp பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இந்த அப் மக்கள் அதிகம் டவுன்லோட் செய்துள்ளனர்.

மக்கள் GB WhatsApp அன்இன்ஸ்டால் செய்ய தொடங்கினர், சிறிது நேரத்தில் அது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தடை செய்யப்பட்டது

GB WhatsApp பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்பட்டிருக்க வேண்டும், ஏனென்றால் இந்த அப் மிகவும் பிரபலமாக இருந்த காலம் இருந்தது. இந்த அப் மக்கள் அதிகம் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப், யூசர்களை அதிகம் கவர்ந்த WhatsApp விட அதிக பியூச்சர் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் காலப்போக்கில் மக்கள் GB WhatsApp அன்இன்ஸ்டால் செய்ய தொடங்கினர், சிறிது நேரத்தில் அது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தடை செய்யப்பட்டது. ஆனால் இன்றும் Apk பைல் மூலம் டவுன்லோட் செய்யலாம். இன்றும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் GB WhatsApp பாதுகாப்பானதா மற்றும் உங்கள் டிவைஸ் மற்றும் டேட்டாவிற்கு இது சரியானதா, உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் நாங்கள் பதிலளிப்போம்.

GB WhatsApp என்றால் என்ன?

இந்த WhatsApp பற்றிய விவாதங்கள் நீண்ட காலமாக உள்ளன. எனவே இது பாதுகாப்பான விருப்பமா இல்லையா என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம். முதலில், இந்த WhatsApp புதிய பதிப்பு அல்ல என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். இது ஒரு குளோன் ஆப். இருப்பினும், WhatsApp விட இதில் அதிக பியூச்சர்  கொடுக்கப்பட்டுள்ளன. WhatsApp போலவே இதில் மெசேஜிங், சேட்டிங், வீடியோ காலிங் போன்ற வசதிகள் உள்ளன மற்றும் பல அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அப் உங்களுக்கு ஏற்ப தனிப்பயனாக்கலாம். இது தவிர ஆட்டோ ரிப்ளை, டிஎன்டி, சேனல் மெசேஜ், டவுன்லோட் ஸ்டேட்டஸ், வேஸ்ட் தீம்கள் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பியூச்சர்களை பார்க்கும்போது, ​​யூசர்கள் WhatsApp விட இந்த அப் மிகவும் சிறந்தது என்று நினைக்கிறார்கள், ஆனால் அது அவ்வாறு இல்லை. GB WhatsApp மிகவும் ஆபத்தானது. எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

GB WhatsApp பாதுகாப்பானதா?

இப்போது இந்த அப்பில் நீங்கள் WhatsApp போன்ற பியூச்சர்களை பெறுவீர்கள், ஆனால் இது உங்களுக்கு பாதுகாப்பானதா. அதை டவுன்லோட் செய்து நிறுவுவது மிகவும் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்க. இதற்குப் பிறகும் நீங்கள் GB WhatsApp பயன்படுத்தினால், உங்கள் அசல் வாட்ஸ்அப் அக்கவுண்டில் நீங்கள் தடுக்கப்படுவீர்கள். உங்கள் தனிப்பட்ட விவரங்கள் GB WhatsApp இல் கேட்கப்படுகின்றன என்பதையும் நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம், இது ஹேக் செய்ய மிகவும் எளிதானது. இந்த ஆப்ஸ் Google Play Store இல் கிடைக்கவில்லை. அதைப் டவுன்லோட் செய்ய, நீங்கள் APK பைல்ஸ் டவுன்லோட் வேண்டும். எப்படியிருந்தாலும், Google Play Store இல் இல்லாத ஒரு அப் பாதுகாப்பானதாகக் கருத முடியாது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo