ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்டின் 77 சதவிகித பங்குகளை வால்மார்ட் வாங்குகிறது
பிளிப்கார்ட் வெப்சைட்டின் 77 சதவிகித பங்குகளை வால்மார்ட் நிறுவனம் 1600 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது.
அமெரிக்க ரீடெயில் நிறுவனமான வால்மார்ட் இந்திய ஆன்லைன் வர்த்தக வெப்சைட்டான பிளிப்கார்டில் 77% பங்குகளை சுமார் 1600 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது. இது அந்நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக இது இருக்கிறது.
இந்தியாவில் 11 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனம் மொத்தம் 20.8 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. பென்டொன்வில், அர்கன்சாஸ் சார்ந்த வால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வாங்குவதாக வால்மார்ட் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் தளத்தின் இணை நிறுவனரான பின்னி பன்சால், ஒப்பந்தம் கையெழுத்தானதும் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். பிளிப்கார்ட் தளத்தை துவங்கும் போது சச்சின் மற்றும் பின்னி இருவரும் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றினர். பிளிப்கார்ட் நிறுவன இணை நிறுவனர் சச்சின் பன்சால் நிறுவனத்தில் தனது 5.5% பங்குகளை வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்கிறார்.
ஒப்பந்தம் கையெழுத்தானதும் பின்னி பன்சால் நிறுவன பணியை தொடர்ந்து மேற்கொள்கிறார். ஜப்பானின் சாஃப்ட் பேங்க் நிறுவனமும் பிளிப்கார்ட் தளத்தில் தனது 20% பங்குகளை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile