ஃபோக்ஸ்வேகன் நிருவத்தின் சிறிய எலக்ட்ரிக் விரைவில் அறிமுகமாகும், பாக்கவே ப்ராமணடமாக இருக்கும்

ஃபோக்ஸ்வேகன் நிருவத்தின் சிறிய எலக்ட்ரிக் விரைவில் அறிமுகமாகும், பாக்கவே ப்ராமணடமாக இருக்கும்
HIGHLIGHTS

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது சிறிய எலெக்ட்ரிக் கார் ID.2all மாடல் விவரங்களை வெளியிட்டு உள்ளது

இந்த எலெக்ட்ரிக் கார் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது சிறிய எலெக்ட்ரிக் கார் ID.2all மாடல் விவரங்களை வெளியிட்டு உள்ளது. தற்போது கான்செப்ட் வடிவில் இருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதன் விற்பனை 2026 ஆண்டு துவங்குகிறது.

தற்போது கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஃபோக்ஸ்வேகன் ID.2all, கடந்த 2021 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ID.Life மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த மாடல் எதிர்கால டிசைன் கொண்டிருப்பதோடு, ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MEB பிளாட்ஃபார்மில் உருவாகி வருகிறது.

முற்றிலும் புதிய ID.3, நீண்ட வீல்பேஸ் கொண்ட ID.Buzz மற்றும் ID.7 மாடல்கள் வரிசையில் ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக ID.2all மாடல் இன்டர்நெட் இருக்கிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் ID.2all பேஸ் வேரியண்ட் விலை 25 ஆயிரம் யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 22 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

இதில் வழங்கப்படும் பேட்டரி விவரங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த காரின் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் பேட்டரியை 10 முதல் 80 வரை சார்ஜ் செய்ய 20 நிமிடங்களே போதும். இத்துடன் வீட்டிலேயே காரை சார்ஜ் செய்துகொள்ள 11 கிலோவாட் சார்ஜர் வசதியும் வழங்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் ID.2all மாடலில் 222 ஹெச்பி பவர் வழங்கும் மோட்டார் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேத்தை 7 நொடிகளுக்குள் எட்டிவிடும். இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் கிடைக்கும் என தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo