Voice Clone Fraud:அச்சு அசலாக நம் நண்பர் மற்றும் உறவினர்களை போல் பேசி எமற்றுவர்கள்
Voice Clone Fraud என்பது ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரின் வொயிஸ் காப்பி செய்து உள்ளடக்கியது. எந்தவொரு மோசடி செய்பவர்களும் இந்த குளோன்களைப் பயன்படுத்தி சாதாரண மக்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்கள், பணம் அல்லது அக்கவுன்ட்களுக்க்ன அணுகலை பெறுகிறார்கள் அவர்களை ஏமாற்றுவது மிகப்பெரிய வொயிஸ் குளோன் மோசடியாகும், பொதுவாக இவை அனைத்தும் மக்களைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகின்றன. பெரிய அளவில் செய்யப்படுகிறது.
ஒரு புதிய அறிக்கையின் படி ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) வொயிஸ் மோசடிகள் லிஸ்ட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது, 83% இந்தியர்கள் இந்த வகையான மோசடிகளால் தங்கள் பணத்தை பெருமளவில் இழந்துள்ளனர். அதாவது 100 பேரில் சுமார் 83 பேர் இந்த மோசடிக்கு பலியாகின்றனர். இதைப் பற்றி விரிவாக பார்க்கலாம் வொயிஸ் குளோனிங்கை நீங்கள் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளலாம் மற்றும் உங்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் இருந்து காப்பாற்றலாம் இதற்க்கு என்ன செய்வது என்று பார்க்கலாம்
சுமார் 83% இந்தியர்கள் AI Voice மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளனர்
McAfee யின் ஒரு ரிப்போர்டின் படி இந்தியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (69%) செயற்கை நுண்ணறிவு (AI) வொயிஸ்க்கும் உண்மையான வொயிஸ்க்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களால் அறிய முடியாது அதாவது கிட்டத்தட்ட நமக்கு தெரிந்தவர் பேசுவதை போல் இருக்கும் ஆனால் நமக்கு தெரியாது இவர்கள் நம்மை ஆபத்தில் கொண்டு செல்கிறார்கள் என்று
ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) எளிதாக ஒரு நபரின் வொயிஸ் வெறும் மூன்று வினாடிகள் ஆடியோ மூலம் குளோன் செய்ய ஆன்லைன் வொயிஸ் மோசடிகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இந்தியா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த 7,054 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. அதன் பிறகு மக்கள் பெரிய அளவில் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது. அறிக்கையின்படி, சுமார் 83% இந்தியர்கள் அதன் பலியாகிவிட்டனர்.
Voice Clone Fraud ஏன் ஆபத்தானது ?
இந்த ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) தொழில்நுட்பத்தைப் பற்றி நீங்கள் நினைத்தால் , ஒவ்வொருவரின் குரலும் அவரவர் அடையாளமாக இருக்கிறது, உங்கள் பயோமெட்ரிக் கைரேகைக்கு சமமாக இதை நீங்கள் கருதலாம். உங்கள் குரலால் மட்டுமே மக்கள் உங்களை தொலைபேசியில் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். இருப்பினும், இந்த குரல் குளோன் செய்யப்பட்டு, அதன் மூலம் உங்களுக்கு நெருக்கமானவர்களை அழைத்து ஏதாவது கொடுக்கச் சொன்னால், உங்கள் அடையாளத்தைப் பயன்படுத்தி நீங்கள் ஏமாற்றப்படுவதாக நீங்கள் நினைக்கலாம்.
வொயிஸ் குளோனிங் மோசடியில், நீங்கள் பயன்படுத்தும் சாதாரண கால் மற்றும் சோசியல் மீடியா கணக்கு செயல்பாடுகளை மனதில் வைத்து உங்கள் குரல் நகலெடுக்கப்படும். இந்த சைபர் கிரைம் மோசடிகள் தற்போது 86% இந்திய பெரியவர்களை குறிவைத்துள்ளன. வொயிஸ் குளோனிங் என்பது வொயிஸ் டேட்டாவை ஆன்லைனில் அல்லது வாராவாரம் ரெக்கார்ட் செய்யப்பட்ட நோட்களை பகிர ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். ஒருவேளை அதனால்தான் இது மிகவும் ஆபத்தானது.
இந்த மாடல் எப்படி வேலை செய்யும்?
மோசடி செய்பவர்கள் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) பயன்படுத்தி துன்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் வொயிஸ் உயர்த்துகிறார்கள் மற்றும் இந்தியர்கள் இத்தகைய மோசடிகளுக்கு இரையாகின்றனர். இந்த சைபர் கிரைமினல்களின் இந்திய பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (66%) நண்பர் அல்லது அன்பானவர் பணம் கேட்டு வ்போஸ் மெயில் அல்லது வொயிஸ் நோட்ஸ் ஷேர் செய்கிறார்கள் என்று என்று McFree கூறினார், இதை தவிர சுமார் (47%) இந்திய பெரியவர்கள் சில வகையான AI வொயிஸ் மோசடியை அனுபவித்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஒரு பெரிய உருவம், இது அனைவருக்கும் ஆபத்தானது.
Voice Clone Fraud இந்தியர்களை நிதி ரீதியாக பாதிக்கிறது!
McAfee யின் அறிக்கையின்படி , 83% இந்தியர்கள் பாதிப்பு அடைந்துள்ளார்கள், இதில் சுமார் 48% மொத்தமாக ரூ.50,000க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) நம்பமுடியாத வாய்ப்புகளைக் கொண்டுவரும் அதே வேளையில், அது தீங்கிழைக்கும் கூறுகளையும் வழங்குகிறது, ஆனால் இன்றைய டெக்னாலஜியில் எது உண்மை, எது போலி என்று யூகிக்கக் கூட முடியாது. “சைபர் மோசடி செய்பவர்கள் உங்களிடமிருந்து பணத்தைத் திருட உங்கள் குரலைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் பலவற்றைச் செய்து வருகிறோம்” என்று McAfree CTO Steve Grobman கூறினார்.
Voice cloning Scam யிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்பட?
எது உண்மையானது மற்றும் AI-உருவாக்கிய டீப்ஃபேக் எது என்பதை வேறுபடுத்துவது கடினமாகி வருகிறது என்றாலும், உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் அல்லது இதற்காக கூடிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும்
ஆன்லைன் வொயிஸ் ஷேரிங்கிளிருந்து தப்பிக்க வேண்டும்.
முதலில், உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் கொடுப்பதைத் தவிர்க்க நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் ஆடியோ பதிவுகள் மற்றும் பிற தகவல்களை அனைவருடனும் பகிர்வதைத் தவிர்க்கவும்.
2FA அதாவது ட்ரூ பேக்டர் அதேடிகேச்னை எனேபில் செய்ய வேண்டும்.
உங்களின் அனைத்து அக்கவுன்ட்களில் 2FA இருக்க வேண்டும், உங்கள் எல்லா சோசியல் மீடியா தளங்களிலும் இதைச் செய்ய வேண்டும், இதைச் செய்வது உங்கள் அக்கவுண்டிற்கு மற்றொரு பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது உங்கள் ஆக்கவுன்ட் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.
காலின் போது அல்லது அதற்குப் பிறகு அழைப்பவரை அடையாளம் காணவும்:
காலர் ஐடியைப் பார்த்து நீங்கள் திருப்தி அடைய வேண்டியதில்லை. எந்த காலரின் அடையாளத்தையும் நீங்கள் அடிக்கடி சரிபார்க்க வேண்டும். காலர்களுக்கு எந்த தகவலையும் வழங்குவதற்கு முன், வேறு பல்வேறு சேனல்கள் மூலம் எந்த காலையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். உங்கள் ஆடியோவை யாருடனும் பகிர்வதையும் தவிர்க்க வேண்டும்.
ஏதேனும் சந்தேககூரிய இருந்தால் உடனடியாக புகரளிக்கவும்.
நீங்கள் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான கால் அல்லது மெசேஜை பெற்றால், இந்த கால் அல்லது மெசேஜை புகாரளிக்க வேண்டும், அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நீங்கள் இந்த மோசடி செய்பவரைப் பிடிக்க முடியும், மேலும் அவர் காவல்துறையினரால் சிறைக்கு அனுப்பப்படலாம்.
இதையும் படிங்க: TECNO POVA 6 Pro இந்தியாவில் Playground Season 3 மார்ச் 29 அறிமுகம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile