USB Charger Scam: கண்ட இடத்தில் சார்ஜ் செய்வதால் உங்களின் போனை ஹேக் செய்யலாம்

Updated on 01-Apr-2024
HIGHLIGHTS

தற்போது இந்தியாவில் cyber Scam பெரிய அளவில் அதிகரித்து வருவதை நாம் அறிவோம்

ஒவ்வொரு நாளும் cyber criminals மக்களை ஏமாற்றும் செய்திகளை தினமும் கேள்விப்பட்டு வருகிறோம்

இருப்பினும் இன்றய களத்தில் புதிய ஸ்கேம் பிறப்பெடுத்துள்ளது, இது USB Charger Scam ஆகும்

தற்போது இந்தியாவில் USB Charger Scam பெரிய அளவில் அதிகரித்து வருவதை நாம் அறிவோம். ஒவ்வொரு நாளும் சைபர் பிராட் மக்கள் பலியாகி வருகின்றனர். cyber criminals மக்களை ஏமாற்றும் செய்திகளை தினமும் கேள்விப்பட்டு வருகிறோம். புதிய வழிகளில் சைபர் குற்றங்களுக்கு பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.

இருப்பினும் இன்றய களத்தில் புதிய ஸ்கேம் பிறப்பெடுத்துள்ளது, இது USB Charger Scam ஆகும். உண்மையில், பொது இடங்களில் நிறுவப்பட்ட சார்ஜிங் ஸ்டேசன்ஸ் மக்கள் தங்கள் போனை சார்ஜ் செய்யத் தொடங்கினால், அவர்கள் USB சார்ஜர் மூலம் பாதிக்கப்படுகிறார்கள், மேல்வேர் ஆப்கள் சார்ஜர் கேபிள் மூலம் அவர்களின் போன்களில் இன்ஸ்டால் செய்யப்படுகிறன

USB Charger Scam அரசு மக்களுக்கு கொடுத்த புதிய டிப்ஸ்

பொது இடங்களான Airports, Cafes, Hotels மற்றும் Bus Stands தவிர Railway Stations போன்றவற்றில் வைக்கப்பட்டுள்ள சார்ஜிங் ஸ்டேஷனில் இருந்து ஃபோனை சார்ஜ் செய்ய வேண்டாம் என அரசு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உண்மையில், USBசார்ஜர் மோசடியைத் தவிர்க்க, அரசு நிறுவனமான CERT-In ஆல் சில நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் இருப்பினும், இந்த வகையான மோசடிக்கு ஜூஸ் ஜாக்கிங் என்று பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூஸ் ஜாக்கிங் என்றால் என்ன, அது எப்படி உங்கள் பேங்க் அக்கவுண்டை காலி செய்யும் என்பதை பார்க்கலாம்.

#scam alert

Juice Jacking என்றால் என்ன ?

“ஜூஸ்-ஜாக்கிங்” என்று அழைக்கப்படும் இந்த நுட்பம், ஹேக்கர்கள் முக்கியமான டேட்டாவை ரகசியமாக திருட அல்லது பயனர்களின் போன்களின் மேல்வேர் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய உதவுகிறது. தனிநபர்கள் தங்கள் கேஜெட்களை சார்ஜ் செய்வதற்காக கொடுக்கப்பட்ட போர்ட்டுடன் இணைக்கும் போது, ​​அவர்கள் அறியாமலேயே சாத்தியமான டேட்டா திருட்டு, மால்வேர் இன்ஸ்டால் அல்லது ஹேக்கர்கள் தங்கள் சாதனத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதற்குத் தங்களைத் திறந்து கொள்கிறார்கள்.

விழிப்புணர்வுக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

இதுபோன்ற செயல்களால் ஏற்படும் ஆபத்தை குறைக்க, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பிற்காக பல செயலூக்கமான நடவடிக்கைகளை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். பொது யூ.எஸ்.பி நிலையங்களை நம்புவதைத் தவிர்க்கவும் குடிமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கூடுதலாக, தனிநபர்கள் பின் அல்லது பாஸ்வர்ட் லோக் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Juice Jacking யிலிருந்து என்ன ஆகும் ?

  • Juice jacking மூலம் போனில் Malicious Apps இன்ஸ்டால் செய்யப்படுகிறது
  • குற்றவாளிகள் உங்கள் மொபைலை ரீஸ்டோர் செய்யலாம் உங்கள் போனின் என்க்ரிப்சன் சேதப்படுத்தலாம்.
  • உங்கள் போனிலிருந்து டேட்டாவை திருடலாம்.

USB Charger Scam யிலிருந்து தப்பிக்க என்ன என்ன வழி?

ட்வீட் மூலம் மிக முக்கியமான தகவலை அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்களையெல்லாம் ஒரே வரியில் சொல்லிவிடுவோம்.

USB-charger scam
  • பொது சார்ஜிங் ஸ்டேஷன் அல்லது போர்ட்டபிள் வால் சார்ஜரில் இருந்து உங்கள் ஃபோன் அல்லது வேறு எந்த சாதனத்தையும் சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும்.
  • உங்கள் மொபைலை சார்ஜிங் செய்ய நீங்கள் ஒரு எலக்ட்ரிக் வால் அவுட்லெட் பயன்படுத்தலாம்.
  • உங்கள் ஃபோனை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், சார்ஜிங் கேபிள் மற்றும் பவர் பேங்கை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் மொபைல் போனை லோக் செய்து வைக்கவும் வேறு எந்த டிவைஸ் உடன் கனெக்சன் செய்யாதபடி டிசெபில் செய்து வைக்கவும்.
  • உங்களின் மொபைல் போனை எப்பொழுதும் லோக் செய்து வையுங்கள், இது தவிர, வேறு எந்த போனுடனும் அதன் கனேக்டிவிடியை டிசெபில் செய்யவும்
  • உங்கள் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகும் போது அதை சார்ஜ் செய்யலாம்.

உங்களுடன் Cyber பிராட் நடந்தால் எப்படி புகரளிப்பது?

உங்களுக்கு ஏதேனும் Cyber மோசடி நடந்திருந்தால், www.cybercrime.gov.in என்ற வெப்சைட்டை பார்வையிடுவதன் மூலம் அதைப் பற்றி புகார் செய்யலாம். இருப்பினும், இது தவிர 1930 என்ற எண்ணிலும் புகார் செய்யலாம். இருப்பினும், இது தவிர கூடுதல் செக்யூரிட்டி குறிப்புகளுக்கு www.cert.in.org.in அல்லது www.csk.gov.in ஐப் பார்வையிடலாம்.

இதையும் படிங்க:Jio கொண்டு வந்துள்ளது Free Offer,50 நாட்கள் வரை கிடைக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :