UPI Payment, IRCTC, LPG போன்ற பல விதிகள், நவம்பர் 1 முதல் மாறியது என்ன என்ன

Updated on 05-Nov-2024

நவம்பர் 1 முதல் பல புதிய விதியை மாற்றியது மேலும் இந்த மாற்றமானது அன்றாட வாழும் குடிமக்களுக்கு இது பாதிக்கலாம், இந்த அப்டேட்கள் பல்வேறு துறைகளில், குறிப்பாக நிதி விதிமுறைகள், இந்திய ரிசர்வ் பேங்கின (RBI) உள்நாட்டு பணப் பரிமாற்றங்களை நிர்வகிக்கும் முக்கிய புதிய விதி உட்பட இதில் எந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளன என்பதையும் பற்றி பார்க்கலாம்.

LPG Cylinder

LPG Gas Cylinder யில் விலை அதிகரிக்கப்பட்டது அதாவது கமர்சியல் LPG gas சிலிண்டரில் விலை 19 kg யில் 62ரூபாய் வரை உயர்த்தப்பட்டது, அதே நேரத்தில் 5 கிலோ சிலிண்டர் விளையும் 15ரூபாயாக உயர்த்தப்பட்டது அதே போல் 14.2கிலோ சிளிடரில் எந்த மாற்றமும் இல்லை

UPI Lite யில் மாற்றம்

UPI லைட் மூலம் ட்ரேன்செக்சன் செய்யும் வசதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) UPI Lite இன் அதிகபட்ச ட்ரேன்செக்சன் லிமிட் 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக அதிகரிக்க முன்வந்துள்ளது. கூடுதலாக, UPI லைட் வாலட் லிமிட் ரூ.2,000ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

IRCTC யின் ரயில் டிக்கெட் புக்கிங்கில் மாற்றம்.

முன்பண டிக்கெட் முன்பதிவு விதியையும் IRCTC மாற்றியுள்ளது. இப்போது டிக்கெட்டுகளை 60 நாட்களுக்கு முன்பே பதிவு செய்யலாம். அதேசமயம், இந்த முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே செய்யப்படலாம். இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் முன்பதிவு நேர லிமிட் கண்டிப்பாக குறைக்கப்பட்டுள்ளது.

RBI யின் பணம் பரிவர்த்தனை

RBI புதிய விதியின்படி உள்நாட்டு பணம் ட்ரேன்ஸ்பர் DMT நவம்பர் 1 முதல் பாதிக்கப்பட்டுள்ளது, இந்த முன்முயற்சி உள்நாட்டு பணப் ட்ரேன்செக்சன் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், புதுப்பிக்கப்பட்ட நிதி விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

TRAI யின் புதிய விதி

ஸ்பேம் மற்றும் போலி அழைப்புகள்/செய்திகளை நிறுத்த TRAI புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதற்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. விளம்பர செய்திகளை தடை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இப்போது எந்த நிறுவனமும் தனிப்பட்ட எண்ணைப் பயன்படுத்தி எந்த அழைப்பையும் செய்தியையும் செய்ய முடியாது. அதாவது அழைப்பு தொடர்பாக அரசாங்கத்தால் தொடர்ந்து புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:UPI பயன்படுத்துவோர் நிச்சயம் கவனிக்கவும் நவம்பர் 1 முதல் மாறிய புதிய ரூல்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :