UPI Lite என்றால் என்ன இது எப்படி வேலை செய்யும் முழுசா பாருங்க

UPI Lite என்றால் என்ன இது எப்படி வேலை செய்யும் முழுசா பாருங்க
HIGHLIGHTS

NPCI UPI லைட் ஆட்டோ டாப் அப் என்ற பெயரில் புதிய அம்சம் கொண்டு வந்துள்ளது

இந்த அம்சம் உங்களின் UPI லைட் பேலன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட லிமிட்டிற்கு கீழே சென்றால் அது தானாகவே மீண்டும் ஏற்றப்படும்

உங்களின் UPI பேமெண்ட்டுகளை இன்னும் வசதியாகவும், தொந்தரவில்லாததாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

UPI Lite Auto Top-Up Feature: நேசனல் பேமன்ட் கார்பரேசன் ஆப் இந்தியா (NPCI),UPI லைட் ஆட்டோ டாப் அப் என்ற பெயரில் புதிய அம்சம் கொண்டு வந்துள்ளது இந்த அம்சம் உங்களின் UPI லைட் பேலன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட லிமிட்டிற்கு கீழே சென்றால் அது தானாகவே மீண்டும் ஏற்றப்படும். இந்த அம்சம், உங்களின் UPI பேமெண்ட்டுகளை இன்னும் வசதியாகவும், தொந்தரவில்லாததாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

UPI Lite என்றல் என்ன ?

UPI Lite ஒரு டிஜிட்டல் வாலெட் ஆகும் இதன் உதவியால் பயனர்கள் சிறிய வாங்குதல் கொடுத்தலை UPI PIN இல்லாமல் செய்ய முடியும் UPI லைட்டைப் பயன்படுத்த, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து உங்கள் UPI Lite வாலட்டில் பணத்தைச் சேர்த்து, பணம் செலுத்துவதற்கு முன்பே ஏற்றப்பட்ட தொகையைப் பயன்படுத்தவும். Google Pay, PhonePe, Paytm மற்றும் BHIM போன்ற பல பிரபலமான UPI ஆப்கள் தங்கள் கஸ்டமர்களுக்கு UPI லைட்டை சப்போர்ட் செய்கிறது

UPI Lite என்பது குறைந் தொகையை அனுவோர்களுக்காக உருவாக்கப்பட்டது, இதில் இதில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.500 வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்கள் UPI லைட் வாலட்டில் அதிகபட்சமாக ரூ.2000 சேர்க்கலாம்.

UPI Lite Auto Top-UpI என்றல் என்ன?

தற்போது உங்கள் UPI பேலன்ஸ் தீர்ந்துவிட்டால், பணம் செலுத்துவதைத் தொடர உங்கள் பேங்க் அக்கவுன்டிலிருந்து கைமுறையாக மீண்டும் ஏற்ற வேண்டும். புதிய ஆட்டோ டாப்-அப் அம்சமானது, குறிப்பிட்ட நிலைக்குக் கீழே பேலன்ஸ் தொகை குறையும் போது, ​​உங்கள் UPI லைட் வாலட்டைத் தானாக மறுஏற்றம் செய்வதன் மூலம் இந்தச் செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

UPI Lite Auto Top-Up அம்சம் எப்படி வேலை செய்யும்?

அப்கம்மிங் UPI Lite Auto Top-Up அம்சம் பயனர்கள் மினிமம் பாலன்ஸ் இருக்க வேண்டும் ( உதாரணமாக 100ருபாய் ) வரையிலான குறிப்பிட்ட தொகையை வைக்க அனுமதிக்கிறது அதாவது UPI லைட் குறைவான பேலன்ஸ் இருந்தால் அது உங்களின் பேங்க் அக்கவுன்டிலிருந்து ஆட்டோமேட்டிக் ட்ரேன்ஸ்பர் ஆகிவிடும்

ரீலோட் தொகையும் (ரூ. 2000க்கு மேல் இருக்கக்கூடாது) பயனரால் தீர்மானிக்கப்பட வேண்டும். UPI லைட் அக்கவுன்ட் ஒரு நாளைக்கு 5 டாப்-அப்கள் வரை அனுமதிக்கும்.

UPI லைட்டில் ஆட்டோ டாப்-அப் அம்சத்தை இயக்குமாறு பாங்க்களுக்கு NPCI அறிவுறுத்தியுள்ளது. யுபிஐ லைட்டில் தானாக டாப்-அப் செய்ய தேவையான அம்சங்கள் மற்றும் பயனர் இன்டர்பேஸ் ஆகியவற்றை UPI ஆப்ஸ் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றும் என்பிசிஐ கட்டாயப்படுத்தியுள்ளது.

NPCI யின் படி ஆர்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பை வழங்கும் வங்கிகள் இருக்கும். “UPI Lite யில் லைவில் இருக்கும் உறுப்பினர்கள் இந்த மாற்றங்களை மனதில் வைத்து அக்டோபர் 31, 2024க்குள் இந்த அம்சத்தை இயக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று NPCI தெரிவித்துள்ளது.

நவம்பர் 1,2024 UPI லைட் யின் ஆட்டோ டாப்-அப் வசதி வளங்கப்படம் என நம்பப்படுகிறது

இதையும் படிங்க: WhatsApp யின் இந்த அம்சம் instagram போல வேலை செய்யும் அது என்ன அம்சம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo