DCA System!போலி கால் மற்றும் மேசெஜ்களுக்கு கிடைக்கும் தீர்வு

Updated on 10-Nov-2023
HIGHLIGHTS

போலி கால்கள் மற்றும் மெசேஜ்கள் வெள்ளம் போல் அதிகரித்து வருகின்ற

DCA அமைப்பை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதற்கு முன்பே, போலி கால்கள் மற்றும் மெசேஜ்களை தடுக்க AI பில்ட்டர்களில் உதவியைப் பற்றி TRAI பேசியது,

ஒவ்வொரு நாளும் மொபைலில் போலி கால்கள் மற்றும் மெசேஜ்கள் வெள்ளம் போல் அதிகரித்து வருகின்றன ஒவ்வொரு நாளும், சலுகைகள், அதிர்ஷ்டக் குலுக்கல் உள்ளிட்ட ஏராளமான பேங்க் மெசேஜ்கள் தடையின்றி அனுப்பப்பட்டு வருகின்றன. முன்னதாக, போலி கால்கள் மற்றும் மெசேஜ்களை தடுக்க அரசாங்கம் பல முறை நடவடிக்கை எடுத்தது, ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் டெலிகாம் நிறுவனங்களுக்காக இருந்தன.எவ்வாறாயினும், இந்த முறை அரசாங்கம் மிகவும் கடுமையான மனநிலையில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் அதாவது TRAI ஆல் ஒரு அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது, அதில் டெலிகாம் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் ஒப்புதல் கையகப்படுத்தல் அதாவது DCA அமைப்பை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது டெலிகாம் கமர்சியல் கம்யுனிகேசன் கஸ்டமர் விருப்ப விதிமுறைகள் 2018ன் கீழ் உருவாக்கப்படும் ஒற்றைச் சாளர தீர்வாகும்.

DCA என்றால் என்ன?

உண்மையில், இதுவரை கன்ஸ்யுமர் இடம் எந்த அதிகாரமும் இல்லை, ஆனால் DCA செயல்படுத்துவதன் மூலம், கன்ஸ்யுமர் அதிகாரத்தைப் பெறுவார், இதன் காரணமாக கன்ஸ்யுமர் ப்ரோமொசனால் கால்கள் மற்றும் மெசேஜ்களை பெற மறுக்க முடியும். அதாவது இப்போது எந்த நிறுவனமும் பயனரின் அனுமதியின்றி ப்ரோமோனால் மெசேஜ்களையும் கால்களையும் அனுப்ப முடியாது. ப்ரோமொசனால் மெசேஜ்கள் மற்றும் கால்களை அனுப்ப, முதலில் நீங்கள் DCA க்கு தெரிவிக்க வேண்டும். இதற்குப் பிறகு, கன்ஸ்யுமர் அனுமதியின்படி ப்ரோமொசனால் மெசேஜ்கள் அனுப்பப்படும்.

டெலிகாம் நிறுவனங்களுக்கும் கிடைக்கும் அதிகாரம்

DCA அமைப்பின் ஒரு நன்மை என்னவென்றால், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்களால் நுகர்வோருக்கு எந்த வகையான ப்ரோமொசனால் மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன என்பதைக் கண்காணிக்க முடியும். மேலும், விதி மீறல்கள் ஏதேனும் உள்ளதா? முன்னதாக, ப்ரோமொசனால் மெசேஜ்களை அனுப்புவதற்கு கன்ஸ்யுமர் அனுமதி பெறப்பட்டதா இல்லையா என்பதை டெலிகாம் நிறுவனங்களால் கண்காணிக்க முடியவில்லை.

இருப்பினும் இப்போது DCA அமைப்பு ஒரு பில்ட்டர் போல் வேலை செய்யும். விளம்பரச் மெசேஜை அனுப்பும் நிறுவனத்திற்கும் கன்ஸ்யுமர் இடையே சிங்கிள் சல்யுசன் விண்டோவாக இது செயல்படும். இந்த தளத்தின் மூலம், கன்ஸ்யுமர் தனது மொபைலில் பேங்கிங் இன்சூரன்ஸ் ட்ரேடிங் மெசேஜ்கள் மற்றும் கால்கள் வேண்டுமா இல்லையா என்பதைத் தெரிவிக்க முடியும்.

இதையும் படிங்க:Gmail Account பயன்படுத்துபவரா அப்போ 1 டிசம்பர்க்குள் டேட்டா சேவ் செஞ்சிகொங்க

விரைவில் இந்த தொல்லைகளிலிருந்து விடுபெறலாம்.

இதற்கு முன்பே, போலி கால்கள் மற்றும் மெசேஜ்களை தடுக்க AI பில்ட்டர்களில் உதவியைப் பற்றி TRAI பேசியது, ஆனால் அதிலிருந்து அதிக பலனைக் காணவில்லை. போலி கால்கள் மற்றும் மேசெஜ்களால் கன்ஸ்யுமர் இன்னும் சிரமப்படுகின்றனர். ஆனால் இப்போது TRAI யின் புதிய தீர்வு விரைவில் போலி கால்கள் மற்றும் மெசேஜ்களை அகற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :