இண்டர்நெட் பாதுகாப்பு தினம்: ஆன்லைன் எக்ஸ்சேன்ஜ்க்கு தரும் டிப்ஸ்

இண்டர்நெட் பாதுகாப்பு தினம்: ஆன்லைன் எக்ஸ்சேன்ஜ்க்கு  தரும்  டிப்ஸ்
HIGHLIGHTS

சர்வதேச இண்டர்நெட் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது பாதுகாப்பாக இருக்க முக்கிய டிப்ஸ்களை தொடர்ந்து பார்ப்போம்.

சர்வதேச இண்டர்நெட் பாதுகாப்பு தினம்  உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது செவ்வாய் கிழமை சர்வதேச இண்டர்நெட் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

ஆன்லைன் பரிவர்த்தனைகள் முன்பு இருந்ததை விட அதிக பிரபலமாகி வருவதை தொடர்ந்து ஹேக்கிங், ரேன்சம்வேர், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஊழல், ATM  உழல் போன்ற சைபர் துறை சார்ந்த குற்றசம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் உலகம் முழுக்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் அதிக கவனமுடன் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

அந்த வகையில் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கவனமுடன் இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம். 

– இண்டர்நெட் கஃபே, பொது இண்டர்நெட் மையங்கள் மற்றும் பொது வைபை பயன்படுத்தி ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

– முழுமையான ஃபையர்வால் மற்றும் ஆண்டி-வைரஸ் மென்பொருள் பாதுகாப்புடன் வீட்டு கம்ப்யூட்டரில் மட்டும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டும். கம்ப்யூட்டர் மற்றும் அதன் இயங்குதளம், செக்யூரிட்டி பேட்ச் உள்ளிட்டவற்றை அப்டேட் செய்ய வேண்டும். 

– வங்கி மற்றும் இதர பண பரிவர்த்தனை சேவைகளில் நீங்கள் உருவாக்கும் கடவுச்சொற்களில் (பாஸ்வேர்டு) குறிப்பிட்ட நிறுவனம் பரிந்துரைக்கும் விதிமுறைகளை முறையே பின்பற்ற வேண்டும். கடவுச்சொற்களில் பிறந்த தேதி, திருமண தேதி, உங்களுக்கு நெருக்கமானவர்களின் பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது.

– உங்களது மிக முக்கிய தகவல்களை அனுப்பக்கோரும் மின்னஞ்சல்களுக்கு பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும். வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சார்ந்த தகவல்களை மற்றவர்களுடன் எக்காரணம் கொண்டும் பகிர்ந்து கொள்ள கூடாது. இவ்வாறான தகவல்களை கோரும் மின்னஞ்சல் லின்க்களை கிளிக் செய்ய வேண்டாம்.

– வங்கி மறஅறும் நிதி நிறுவன கடவுச்சொற்களை சமூக வலைத்தளம் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது. வங்கி வலைத்தளங்களை பயன்படுத்தும் போது வலைத்தள முகவரியில் https துவங்குவதை உறுதி செய்ய வேண்டும். https என்ற குறியீடு வலைத்தளத்தின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo