இந்த 12 ஆப் உங்களின் மொபைலில் இருந்தா உடனே டெல்ட் பண்ணுங்க

Updated on 14-Feb-2024
HIGHLIGHTS

ESET யின் ஆராய்ச்சியாளர்கள், உளவு பார்ப்பதற்காக ஒரே மாதிரியான மேல்வேர் கோடை பகிர்ந்து கொள்ளும் 12 ஆண்ட்ராய்டு ஆப்களை கண்டுபிடித்தனர்

இந்த ஆப்கள் நூற்றுக்கணக்கான போன்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன

இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயனர்களை பாதிக்கின்றன

இந்த மாத தொடக்கத்தில், சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ESET யின் ஆராய்ச்சியாளர்கள், உளவு பார்ப்பதற்காக ஒரே மாதிரியான மேல்வேர் கோடை பகிர்ந்து கொள்ளும் 12 ஆண்ட்ராய்டு ஆப்களை கண்டுபிடித்தனர்.இந்த ஆப்கள் நூற்றுக்கணக்கான போன்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆப்கள் பெரும்பாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயனர்களை பாதிக்கின்றன. சிறப்பு உளவு பார்க்க பயன்படும் இந்த ஆப்களில் VajraSPY மால்வேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கையிடப்பட்ட எல்லா ஆப்களிலும் ஒன்று மெசேஜ் ஆப் என்றும் மற்றவை மெசேஜ் டூல்கள் என்றும் கூறுகின்றன. இந்த ஆப்ஸ் வஜ்ரஸ்பி ரிமோட் அக்சஸ் ட்ரோஜன் (RAT) கோடை ரகசியமாக செயல்படுத்துகிறது, இது இலக்கு உளவு பார்ப்பதற்காக பேட்ச்வொர்க் APT குழுவால் பயன்படுத்தப்படுகிறது.

இதில் இந்தியா பாகிஸ்தானுக்கும் என்ன கனெக்சன்?

ESET ஒரு ரிப்போர்டின் படி வெளியிட்டுள்ள அதில் 12 ஆண்ட்ராய்டு ஆப்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயனர்களை உளவு பார்ப்பதற்காக குறிவைப்பதாக கூறுகிறது. RAT கோடை இயக்கி, போனின் காண்டேக்ட்கள் பைல்கள் காலிங் ரெக்கர்ட்கள் மற்றும் SMS ஆகியவற்றைத் திருடும் ஆப்களில் இதே போன்ற VajraSPY மேல்வேர் கண்டறியப்பட்டது. இது மட்டுமின்றி, இந்த ஆப்ஸ்களில் சில வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் தளங்களில் இருந்து மேசெகளை திருடலாம் என கூறப்படுகிறது , போன் கால்களை ரெக்கார்ட் செய்தல் மற்றும் கேமராவில் இருந்து போட்டோக்கள் எடுப்பது போன்றவற்றையும் செய்யலாம் என்றும் அறிக்கை கூறுகிறது.

12 malware app

ESET டெலிமெட்ரி டேட்டா இதை மலேசியாவில் இருந்து மட்டுமே கண்டறிந்தாலும், அவை வெறும் தற்செயலானவை மற்றும் பிரச்சாரத்தின் உண்மையான நோக்கங்கள் இல்லை என்றும் நிறுவனம் நம்புகிறது, அதன் முக்கிய நோக்கங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் ஆகும் .

ESET கூறுகிறது “பாதிக்கப்பட்டவர்கள் ஹனி-ட்ராப் ரோமன் ஸ்ச்கேம்கள் மூலம் தொடர்பு கொள்ளப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம், அங்கு பிரச்சார ஆபரேட்டர்கள் மற்ற தளங்களில் தங்கள் இலக்குகளில் காதல் மற்றும்/அல்லது பாலியல் ஆர்வத்தை காட்டி, பின்னர் இந்த ட்ரோஜனேற்றப்பட்ட “ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்ய உங்களை சமாதானப்படுத்தினர்” மூலம் அவர்களை அனுப்பினார்கள்.

இவற்றில் 12 ஆப்கள் Google Play Store யில் இருந்தபோது, ​​மற்றவை (Xamalicious உட்பட) மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களில் உள்ளன. கூகுள் அனைத்து ஆப்ஸ்களையும் நீக்கியிருந்தாலும், ஒரு பயனர் ஏற்கனவே தனது போனில் இன்ஸ்டால் செய்திருந்தால் அவர் அவற்றை அகற்ற வேண்டும்.

Google play ஸ்டோரில் இருக்கும் 12 ஆப்கள்

Hello Chat
Chit Chat
Meet Me
Nidus
Rafaqat News
Tik Talk
Wave Chat
Prive Talk
Glow Glow
Lets Chat
NioNio
Quick Chat
Yoho Talk

அதே போல் Xamalicious பொருத்தபட்ட ஆப்களும் இதே போன்றதாகும் Track Your Sleep, Auto Click Repeater, Numerology: Personal Horoscope & Number Predictions, Universal Calculator, Logo Maker Pro, Essential Horoscope for Android, 3D Skin Editor for PE Minecraft, LetterLink, Step Keeper: Easy Pedometer, Astrological Navigator: Daily Horoscope & Tarot, Count Easy Calorie Calculator, Sound Volume Booster, Sound Volume Extende

இதையும் படிங்க: Valentine’s Day 2024: Google உருவாக்கியுள்ளது சிறப்பு டூடுல்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :