Tata Nexon எலக்ட்ரிக் காருக்கு ரூ. 1.6 லட்சம் வரை டிஸ்கவுண்ட் அறிவிப்பு.

Tata Nexon எலக்ட்ரிக் காருக்கு ரூ. 1.6 லட்சம் வரை டிஸ்கவுண்ட் அறிவிப்பு.
HIGHLIGHTS

எலெக்ட்ரிக் கார் மாடல்களை வாங்க பல்வேறு காரணிகள் உள்ளன

டாடா நெக்சான் EV மாடலின் விலை ரூ. 2 முதல் ரூ. 3 லட்சம் வரை குறைந்தது.

புதிய நெக்சான் EV பிரைம் வாங்குவோருக்கு ரூ. 90 ஆயிரம் வரயைிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

எலெக்ட்ரிக் கார் மாடல்களை வாங்க பல்வேறு காரணிகள் உள்ளன. இவற்றில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சாக்பில் வழங்கப்படும் மாணியங்களாலும் எலெக்ட்ரிக் வாகன விற்பனை இந்தியாவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மாணியம் FAME II திட்டத்தின் கீழ் வழங்ப்படுகிறது.

இதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை மற்றும் மாணியம் வழங்கப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பதிவு கட்டணம் மற்றும் சாலை வரிக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மாணியங்கள் அமலில் இருந்த சமயத்தில் டாடா நெக்சான் EV மாடலின் விலை ரூ. 2 முதல் ரூ. 3 லட்சம் வரை குறைந்தது.

புதிய நெக்சான் EV பிரைம் வாங்குவோருக்கு ரூ. 90 ஆயிரம் வரயைிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. புதிய அறிவிப்புகளின் படி டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலை வாங்குவோர் ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகைகள் பெறலாம். தற்போதைய சலுகைகள் தவிர டாடா மோட்டார்ஸ் தனது எலெக்ட்ரிக் கார் விலையை சமீபத்தில் தான் குறைத்து இருந்தது.

தற்போது நெக்சான் EV மாடலுக்கான மாணியங்கள் நிறுத்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக நெக்சான் EV விற்பனை குறைய துவங்கி இருக்கிறது. அதன்படி நெக்சான் EV விற்பனையை மீண்டும் அதிகப்படுத்த டாடா மோட்டார்ஸ் சிறப்பு சலுகை மற்றும் கவர்ச்சிகர பலன்களை அறிவித்து இருக்கிறது. நெக்சான் EV பிரைம் மாடலுக்கு ரூ. 90 ஆயிரம் வரயிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

அதன்படி ஜனவரி 2023 மாதத்தில் டாடா நெக்சான் EV பிரைம் விலை ரூ. 50 ஆயிரம் வரை குறைக்கப்பட்டது. நெக்சான் EV மேக்ஸ் விலை ரூ. 85 ஆயிரம் வரை குறைக்கப்பட்டது. முந்தைய விலை குறைப்பு, தற்போதைய சலுகைகள் சேர்த்தால் டாடா நெக்சான் EV பிரைம் விலை ரூ. 1 லட்சத்து 40 ஆயிரமும், நெக்சான் EV மேக்ஸ் மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 65 ஆயிரம் வரையிலான சலுகைகள் கிடைக்கின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo