OTT Release: இந்த வார அட்டகாசமான படங்கள் உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்

OTT Release: இந்த வார அட்டகாசமான படங்கள் உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்
HIGHLIGHTS

OTT சேவை என்பது தற்பொழுது முக்கிய பங்கு வகிக்கிறது

மக்கள் இன்றைய காலத்தில் அதிகப்படியாக ott யில் மூவி மற்றும் சீரிஸ் பார்க்க விரும்புகிறார்கள்

OTT தளங்கள் பற்றி பேசுகையில் இதில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ஆஹா, ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 போன்றவை அடங்கும்.

OTT சேவை என்பது தற்பொழுது முக்கிய பங்கு வகிக்கிறது மக்கள் இன்றைய காலத்தில் அதிகப்படியாக ott யில் மூவி மற்றும் சீரிஸ் பார்க்க விரும்புகிறார்கள் மேலும்மக்கள் மனதை அதிக கவரும் OTT தளங்கள் பற்றி பேசுகையில் இதில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ஆஹா, ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 போன்றவை அடங்கும். மேலும் இந்த வாரத்தில் OTT யில் வெளிவந்த மற்றும் வர இருக்கும் படங்களின் OTT இல் ஸ்ட்ரீம் செய்ய நீங்கள் காத்திருக்கும் திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்து, அதை வீட்டில் பார்த்து மகிழுங்கள் இந்த லிஸ்ட்டில் எந்த எந்த படங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

Lal Salaam

‘Lal Salaam’மூவீ பிப்ரவரி 9 2024 பிரண்டமாக வெளியிடப்பட்டது, இந்த பொதுமக்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பார்வையாளர்களைக் கவரவும், அவர்களிடையே ஒரு அடையாளத்தை ஏற்படுத்தவும் தவறிவிட்டது. இந்த திரைப்படத்தில் Rajinikanth மிக பெரிய ரோலில் நடித்துள்ளார் இதை தவிர இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதுதவிர விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ். ரவிக்குமார், தம்பி ராமையா போன்ற திறமையான நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கதையைப் பற்றி பேசுகையில், இந்த படத்தில் சில ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்கள் திறமை இருந்தபோதிலும் அணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். தங்கள் கனவுகளை நனவாக்க இந்த கெட்ட நேரத்தை அவர்கள் எப்படி போராடுகிறார்கள் என்பதை இப்போது பார்க்க வேண்டும். இப்படம் மார்ச் 15ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகியது இதை தவிர இதில் SUNNXT யில் பார்க்கலாம்.

YouTube video player

IMDB Ratings: 4.8
Language and Genre: Tamil, Hindi, Action, Drama, Sport
Cast: Vishnu Vishal, Vikranth, Vignesh, Livingston, Senthil, Jeevitha, K.S. Ravikumar, Thambi Ramaiah
OTT Release Date: 15 March 2024
Where to Watch: Netflix

Premalu

Premalu ஒரு ரொமண்டிக் காமெடி திரைப்படமாகும் இது பிப்ரவரி 9 2024 யில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது இந்த படம் தெலுங்கின் டப்பிங் வெர்சன் மார்ச் 8 அன்று தியேட்டரில் ரிலீசானது தமிழ் பதிப்பு மார்ச் 15 அன்று வெளியிடப்பட்டது. இதற்கிடையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரேமலுவின் OTT உரிமையைப் பெற்றுள்ளது மற்றும் அதன் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் மார்ச் 29 முதல் தொடங்கும் என்று சமீபத்திய அப்டேட்கள் தெரிவிக்கின்றன.இதில் அல்தாஃப் சலீம், ஷியாம் மோகன் எம்., அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், சங்கீத் பிரதாப், ஷமீர் கான் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். பிரேம்லு அதன் சக்திவாய்ந்த கதை, கவர்ச்சியான இசை மற்றும் நட்சத்திர நிகழ்ச்சிகளுக்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். 5 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. 106 கோடியைத் தாண்டிய ஐந்தாவது மலையாளப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video player

மறக்குமா நெஞ்சம்

மறக்குமா நெஞ்சம் இது ஒரு பள்ளிக்கூட கதைகளை மையமாக உருவாக்கப்பட்டது, பள்ளிக்குத் திரும்பும் போது அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவற்றின் வழியாக அவர்கள் எப்படிச் செல்கிறார்கள் என்பதை கதை ஆராய்கிறது, வழியில் ஏற்படும் தாக்கத்தையும் விளைவுகளையும் எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு தமிழ் திரைப்படம் ஆகும் மறக்குமா நெஞ்சம்” மார்ச் 19, 2024 அன்று OTT பிளாட்ஃபார்ம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது

YouTube video player

வடக்குப்பட்டி ராமசாமி

வடக்குப்பட்டி ராமசாமி ஒரு தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும் இந்த படம் மார்ச் 12, 2024 Amazon Prime வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கிறது. இந்த நகைசுவைப்படத்தில் சந்தானம் முக்கிய கதாப்பத்ரத்தில் நடிக்கிறார் இதை தவிர இதில்
மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி என பல முன்னணி முக்கிய பிரபலங்கள் நடித்துள்ள இப்டத்ததை கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளியாகியுள்ளது இப்படத்தின் கடஹையை பற்றி பேசுகையில் கதைக்கரு: கடவுள் பெயரில் பல தில்லு முல்லு செய்து மக்களை ஏமாற்றி பிழைக்கும் சந்தானம் சந்திக்கும் பிரச்சனைகள் அதனை அவர் எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் கதை.

YouTube video player

Lover

லவ்வர் இது தமிழ் மொழி காதல் நாடகத் திரைப்படமாகும் இப்டத்தை பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ளது, இது அடுத்த வாரம் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியிடப்பட உள்ளது. தகவல்களின்படி, படம் மார்ச் 27 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் OTT அறிமுகமாகும். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வரவில்லை. இந்த படத்தில் மணிகண்டன் முக்கிய வேடத்தில் நடித்த இப்படம், பிப்ரவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. கண்ணா ரவி, ஸ்ரீ கௌரி பிரியா, ஹரிணி, ஹரிஷ் குமார் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். தொழில், தனிப்பட்ட மற்றும் சமூக விஷயங்களில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை யதார்த்தமாக சித்தரித்ததற்காக ‘காதல்’ திரைப்படம் பாராட்டப்பட்டது.

YouTube video player

தூக்குதுரை

தூக்குதுரை திரைப்படம் கடந்த ஜனவரி 25 தேதி திரையரகுகளில் வெளியானது இப்படம் நகசிவை கலந்த திகில் திரைப்படமாகும் இப்டத்தின் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் வெளியாகியுள்ளது இப்படத்தில் யோகிபாபு, இனியா நடித்துள்ளர்கள இப்டத்தித்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த யோகி பாபு ஜமின்தார் பெண்ணான இனியவை காதலிக்கிறார், இதை தெரிந்து கோபம் அடையும் ஜமின் யோகிபாபுவை கிணற்றில் எரித்து விடுகிறார்கள், அதன் பிறகு தான் ட்விஸ்ட் நடக்கிறது பிறகு கிணற்றில் ஒரு புதையல் கிடைக்கிறது அதை எடுக்க வருபவரை யோகிபாபு பேயாக மாறி பயமுறுத்துகிறார இந்த நகைச்சுவை கலந்த படத்தை பார்க்க வேண்டும் என்றால் தூக்குதுரை மார்ச் 8, 2024 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

YouTube video player

Fighter

Fighter ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகியது இது பல கலவை விமர்சங்களை பற்றது இப்போது இது டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வரவிருக்கும் ஒரு சிறந்த படமாகும், இது குறிப்பாக ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் இடையேயான சிறந்த வேதியியல் மற்றும் யதார்த்தமான வான்வழி அதிரடி காட்சிகளுடன் இடம்பெறும். OTT தளத்தில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சித்தார்த் ஆனந்த் இயக்கிய ரோஷன் மற்றும் படுகோனே தவிர, அனில் கபூர், கரண் சிங் குரோவர், அசுதோஷ் ராணா மற்றும் அக்‌ஷய் ஓபராய் போன்ற பல ஈர்க்கக்கூடிய நடிகர்களும் நடித்துள்ளனர். இது மார்ச் 21 அன்று ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிக்ஸ் யில் வெளியிடப்படும்.

இதையும் படிங்க:Truecaller யில் புதிய AI அம்சம் ஸ்பேம் கால்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு

YouTube video player

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo